• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-16 09:40:50    
சீன நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மை

cri

சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சீனா, ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சீனா நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அண்மையில் சீன நிதி அமைச்சர் Xie Xuren தெரிவித்தார்.
சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட ஓராண்டுக்குப் பின், சீனப் பொருளாதாரத்தில் நிதானமான வளர்ச்சி நிலைமை தோன்றியுள்ளது என்று சில பொருளாதாரத் தரவுகள் காட்டுகின்றன. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 7.9 விழுக்காடு அதிகரித்தது. 2007ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல் தொடர்ந்து 7 காலாண்டுகள் தணிவடைந்த சீனப் பொருளாதாரம், முதல்முறையாக விரைவுபடுத்தப்பட்டது.


நிதி நெருக்கடியின் நிழலிலிருந்து சீனப் பொருளாதாரம், முதலில் விடுபட்டது, சீனா நடைமுறைப்படுத்தும் ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கைகளுடன் பிரிக்கப்பட முடியாததாகும். இது பற்றி சீன நிதி அமைச்சர் Xie Xuren அறிமுகப்படுத்தியதாவது,
ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கையின் படி, அரசின் பொது ஒதுக்கீட்டைப் பெரிதும் அதிகரிப்பது, முக்கிய கட்டுமானங்களை உத்தரவாதம் செய்வது முதலிய பல திட்டவட்டமான நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அவை, உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், காப்புறுதித் தன்மை வாய்ந்த வீடுகளின் கட்டுமானத்திலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலான மறுசீரமைப்பிலும் 10 ஆயிரத்து 400 கோடி யுவானை ஒதுக்கியது. இவ்வாண்டில், இத்துறைகளில் 90 ஆயிரத்து 800 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 48 ஆயிரத்து 750 கோடி யுவான் அதிகம் என்று Xie Xuren கூறினார்.
ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கையைத் தவிர, நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் சீனாவின் ஆற்றல், சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார ஆற்றலிலிருந்தும் பிரிக்க முடியாதது. நவ சீனா நிறுவப்பட்ட துவக்கத்தில், 1950ம் ஆண்டின் சீன நிதி வருமானம் 620 கோடி யுவான் மட்டும். 2008ம் ஆண்டு, இது 6 இலட்சம் கோடி யுவானாகும். 2009ம் ஆண்டின் இறுதியில், நிதி வருமானம் 6 இலட்சத்து 62 ஆயிரம் கோடி யுவான் ஆகும் என்று மதிப்பிடப்படுகிறது. 60 ஆண்டுகாலத்தில், நிதி வருமானம், ஓராயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. நிதி வருமானத்தின் அதிகரிப்பில் நிதி வாரியங்களின் பணிகள் மிக முக்கிய பங்காற்றியது என்று Xie Xuren தெரிவித்தார்.

1 2