நிதிப் பணி, தேசியப் பொருளாதாரத்தின் முழுநிலையுடனும், பொது மக்களின் அடிப்படை நலன்களுடனும் நேரடித் தொடர்புடையது. கவனமான மனப்பான்மையுடன் நிதிப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று Xie Xuren கூறினார். சீன நிதி வருமானத்தின் அதிகரிப்புடன், சீனாவின் நிதிச் செலவும் படிப்படியாக விரிவாகியுள்ளது. அது, 1950ம் ஆண்டின் 680 கோடி யுவானிலிருந்து, 2009ம் ஆண்டின் 7 இலட்சத்து 62 ஆயிரம் கோடி யுவானுக்கு உயர்ந்துள்ளது. இது, 1120 மடங்கு அதிகம். இது, சீனச் சமூக மற்றும் பொருளாதார இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதில், முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. அதே வேளையில், சீன நிதிச் செலவின் கட்டமைப்பும், இடைவிடாமல் மாறியுள்ளது. உற்பத்திக் கட்டுமான ரக நிதிக் கட்டமைப்பிலிருந்து, பொது நிதிக்கு படிப்படியாக மாறியது. அதிகமான பொது நலப்பொருட்கள் மற்றும் பொதுச் சேவைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை அரசு மேம்படுத்த சமூக உத்தரவாதத்துக்கான செலவை அதிகரித்தது.
இவ்வாண்டு, சீன நடுவண் நிதி வரவு செலவில், பொது மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய கல்வி, மருத்துவச் சிகிச்சை, பண்பாடு முதலியத் துறைகளிலான செலவுத் தொகை, 72 ஆயிரத்து 850 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 29.4 விழுக்காடு அதிகமாகும். இதன் விளைவாக, மக்களின் வாழ்க்கைத் தரம், மேலும் சிறப்பாக உத்தரவாதம் செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது என்று Xie Xuren கூறினார். கடந்த சில ஆண்டுகளில், கிராமப்புறங்களுக்கான நிதிச் செலவை சீனா இடைவிடாமல் அதிகரித்து வருகிறது. வேளாண்துறையில் வரி வசூலிப்பை நீக்கியதோடு, விவசாயிகளுக்கு பல்வகை நேரடி மானியத்தை வழங்கி, வேளாண்துறையில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை அதிகரித்துள்ளது. நிதி வாரியங்கள், கிராமப்புறங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று Xie Xuren தெரிவித்தார். சீனாவில் சில பிரதேசங்களில் முதலில் புதிய ரகக் கிராமப்புற முதுமைக் காலக் காப்புறுதியை சீர்திருத்தம் செய்யும் சோதனை ரீதியான பணி மேற்கொள்ளப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, அரசு குறிப்பிடத்தக்க முதுமைக்கால ஓய்வூதியத்தை வழங்கும். அதே வேளையில், அவர்கள் இக்காப்புறுதியில் கலந்து கொள்வதையும் ஊக்குவிக்கும் என்று Xie Xuren கூறினார். 130 கோடி மக்களைக் கொண்ட மாபெரும் நாட்டின் நிதி நிர்வாகப் பணியைச் செவ்வனே மேற்கொள்ளும் சுமை, கடுமையானது. நிதி நெருக்கடியின் பாதிப்பை, முழுமையாக நீக்கும் நிலைமையில், நிதிச் செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்கும் நிர்ப்பந்தம் வன்மையாக இருக்கிறது என்று Xie Xuren தெரிவித்தார். ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கையை மேற்கொண்டு, நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையை நிலைநிறுத்தி, பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது, நிதிக் கொள்கை மேற்கொள்ளும் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட வேணடும் என்று அவர் கூறினார்.
1 2
|