• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-20 14:42:00    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழன்பன் அன்பர்களே! இந்நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்கள் இடம்பெற, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பற்றி கருத்துக் கடிதங்களை எழுதி அனுப்புங்கள்.
கலை எமது நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை உலகிலுள்ள நமது வானொலி நேயர்கள் அனைவரும் கேட்க செய்யுங்கள்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஒலிப்பதிவு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி திமிறி இராமபாளையம் இரா.கேசவன் அனுப்பிய கடிதம். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு சீனாவின் ஷாங்காய் மாநகரத்தில் நடத்தப்படும் உலகப் பொருட்காட்சி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இப்பொருட்காட்சியில் பங்கொள்வதை உறுதி செய்துள்ள நாடுகள், தங்களது நாட்டின் பொருட்களை காட்சிக்கு வைக்கும் அரங்குகளை கட்டியமைத்து வருகின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி உலக உற்பத்திப் பொருட்களின் சந்தையை முன்னேற்றும் அதேவேளையில், உலக நாடுகள் சீனாவுடன் நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கும்.
தமிழன்பன் தொடர்வது, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் செந்து நகரில் சர்வதேச தேயிலை கண்காட்சி நடைபெற்றதை அறிந்தோம். 2008 ஆம் ஆண்டில் சீனாவின் தேயிலை உற்பத்தி 12 இலட்சத்து 46 ஆயிரம் டன் என்றும், அதே ஆண்டில் ஈராயிரத்து 97 ஆயிரம் டன் தேயிலை ஏற்றுமதியானது எனவும் அறிந்தேன். தேயிலை ஏற்றுமதியில் கென்யா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்து, சீனா மூன்றாவது நாடாக இருப்பதையும் தெரிந்து கொண்டேன். நீலகிரியில் நடைபெறும் தேயிலை உற்பத்தி தொடர்பான கூட்டங்களில் நான் அடிக்கடி கலந்து கொள்வதுண்டு. சீனாவின் சாதனைகளை அக்கூட்டத்தில் எடுத்துரைப்பேன். இது, நீலகிரியிலுள்ள பல தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்பதற்கு வழிவகுக்கும்.


கலை அடுத்து, சீன இசை நிகழ்ச்சி பற்றிய ஆரணி பொன். தங்கவேலன் அனுப்பிய கடிதம். இராணுவம் தொடர்புடைய பாடல்கள் சீன இசை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. சீனக் தேசியக்கொடியின் பாராட்டுப் பாடல், இராணுவ ஆடை அணிந்த சிச்சுவான் இளம்பெண் பற்றிய பாடல், இராணுவப் படையினரை பாராட்டும் பாடல்கள் ஒலிபரப்பாயின. இவை கேட்பதற்கு இனிய இராகத்தை கொண்டிருந்தன.
தமிழன்பன் மதுரை அண்ணாநகர் என்.இராமசாமி அனுப்பிய கடிதம். லாசாவிலுள்ள Depung கோயில் பற்றி தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன. திபெத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் லாசாவிலுள்ள Depung கோயிலை சுற்றிபார்க்காமல் திரும்புவதில்லை என்பதையும், தலைமுறை தலைமுறையாக தலாய்லாமா புத்தர்கள் வாழ்ந்த இக்கோயில் அரசி மலை எனப்படும் ஹூசி மலையில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் இந்நிகழ்ச்சி மூலம் அறிந்தேன். அவ்வாறு புகழ்பெற்ற கோயிலை நேரில் சென்று பார்க்கும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.
கலை திருச்சி எம்.தேவராஜா இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு எழுதிய கடிதம். இந்தியாவில் வாழ்க்கைக்கு தேவையான அன்றாடப் பொருட்களின் விலையேற்றம் பற்றி செய்திக் கேட்டேன். விலை உயர்வுக்கு பரவ மழை பொய்த்து போனது காரணமாக காட்டப்பட்டாலும், அது முற்றிலும் உண்மையில்லை என்றே தோன்றுகிறது. தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல், தேர்தல்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதே இதற்கு உண்மையான காரணமாக அமைய முடியும். மக்களின் தற்காலிக தேவையில் கவனம் செலுத்தாமல், எதிர்கால, தொலைநோக்கு திட்டங்களை கண்ணும் கருத்துமாக செயல்படுத்தினால் மக்களின் இன்னல்கள் நிரந்தரமான நீங்கும் என்பது எனது கருத்து.

1 2