மின்னஞ்சல் பகுதி பாண்டிச்சேரி N.பாலகுமார் அனுப்பிய மின்னஞ்சல் நவசீன நிறுவப்பட்டு, 60ஆம் ஆண்டு நிறைவு, வைரவிழாவை சீன மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியாக தருணத்தில், நானும் சீன மக்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் வழியாக வண்ணமாயமான கலைநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தேன். அவற்றை பார்த்தபோது நானும் விழாவில் கலந்துகொண்ட மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்த உணர்வு கிடைத்தது. தாய்நாட்டைக் கட்டியமைப்பதிலும் உலகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுவதிலும் நம்பிக்கையும் திறமையும் சீன மக்களுக்கு உண்டு என்று சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கொண்டாட்ட விழாவில் தெரிவித்த கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. சீன வானொலி நண்பர்களுக்கும், சீன மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல் அக்டோபர் முதல் நாள் நவசீனா நிறுவப்பட்ட 60வது நிறைவு வைர விழா கொண்டாட்டத்தில் சீன தலைவர் ஹு-சிந்தாவ் உரையை சீன வானொலியில் கேட்டபோது பரவசத்தில் ஆழ்ந்தேன். தாய் நாட்டை கட்டியமைக்க பாடுபடும் சீன மக்கள் உலகத்துக்கு குறிப்பிட்ட பங்கினை ஆற்றிவருகிறார்கள் என்றும், மேலதிக பங்கினை சீன மக்கள் ஆற்றுவர் என்றும் சீன அரசுத்தலைவர் ஹு சிந்தாவ் கூறியது, தனது நாட்டிலுள்ள மக்களின் நலனோடு, உலக மக்களின் நலனிலும் சீனா கொண்ட அக்கறையை காட்டியது.
வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல் சீனக் குடியரசு நிறுவப்பட்டு, 60ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடும், சீன அரசுக்கும், அதன் மக்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி, மருத்துவம், அறிவியல் தொழில் நுட்பம், விவசாயம், விண்வெளி என பல துறைகளில் சீனா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அக்டோபர் முதல் நாள் நடைபெற்ற கொண்டாட்ட ஊர்வலத்தினை இணையத்தில் காண, கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. நாங்களும் அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் சீனா உழைப்புத் திறன் மிக்க மக்களின் துணைகொண்டு, மேன்மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவது உறுதி. சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல் நவ சீனாவின் வைர விழா கொண்டாட்ட கூட்டத்தின் போது சீன அரசுத் தலைவர் ஹூசிந்தா வழங்கிய உரை, கடந்த 60 ஆண்டுகளாக சீன அரசு கடந்த வந்த பாதையை புரிந்துகொள்ளச் செய்தது. மேலும் எதிர்காலத்தில் சீனா சர்வதேச சமூக மேம்பாட்டிற்க்காக ஆற்றபோகும் பங்கினை எதிர்பார்க்கவும் செய்துள்ளது.
உத்திரக்குடி சு.கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல் நவசீனாவின் வைரவிழா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் சீனாவில் இளம் படைவீரர்களின் சிறந்த வெளிப்பாடு என்ற தலைப்பிலான கட்டுரையை கேட்டேன். ஒவ்வொரு நாட்டு இளைஞர்களிடமுள்ள மானிடம் என்றொரு வாளும், அதை வசத்தில் அடைத்திட்ட அவனிரு தோள்களும், வானையும் வசப்பட வைக்கும், இதில் நம்பிக்கை வைத்திடு, வாழ்வைப் உயர்த்தும் என்று சொல்லும் புரட்சிக் கவிஞனின் வைர வரிகளை இக்கட்டுரை நினைவூட்டியது. நாளைய உலகம், வாழ்வு அனைத்தும் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. 1980 முதல்1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சீனாவில் பிறந்து தற்போது இளம் படைவீரர்களாய் இருக்கின்ற சீன மக்கள் விடுதலைப்படை வீரர்களின் பொறுப்பையும், கடமையுணர்வையும் மெச்சுகிறேன். இந்த இளம் படைவீரர்கள் மனறுதியுடன், சமூக அக்கறையோடு நாட்டுக்காக பாடுபட்டு சாதனை படைப்பது மகிழ்ச்சி அளிகின்றது.
1 2
|