• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-27 16:51:02    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே! உங்கள் கருத்துக் கடிதங்களின் தொகுப்பாய் விளங்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு, தொடர்ந்து கருத்துக் கடிதங்கள் எழுதி, செஞ்சீன மண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி வழியாக தங்கள் கருத்துக்களை உலக மக்களுக்கு தெரிவிக்கும் அன்பர்களுக்கு நன்றிகள்
கலை சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி கருத்து கடிதங்கள் எழுதி வழங்கிவரும் ஆதரவு தொடரட்டும்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கமாக, பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றி எஸ். எம். இரவிசந்திரன் எழுதிய கடிதம். சீன கட்டிடக் கலையின் வளர்ச்சி அக்க்கறையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக மாறியதை சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் கேட்டேன். ஷாங் மற்றும் மிங் வம்ச காலங்களில் அழகும், கலை நுட்பமும் மிகுந்த பல கட்டிடங்கள் சீனாவில் கட்டப்பட்டுள்ளன. 11வது நூற்றாண்டு முதல், 14வது நூற்றாண்டு வரை சீனர்கள் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியுள்ளதையும் இந்நிகழ்ச்சி மூலம் அறிய முடிந்தது.


தமிழன்பன் அடுத்து, குடியாத்தம் டி.சுடர்க்கொடி நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இன்றைய நிகழ்ச்சியின் தேரை கலையரசி அவர்களும், கிளிட்டஸூம் ஓட்டினர். செல்வம் பயணம் செய்தார். செல்வம் முதல்முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டதற்கு பின்னர், 17 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இமாலைய வளர்ச்சியை தனது இரண்டாவது சீனப் பயணத்தின்போது நேரில் கண்டுள்ளார். வாகனப் போக்குவரத்து வளர்ச்சி, சாலை வசதிகள், போக்குவரத்து நெரிசல் குறைவு, மிக பெரிய துவக்கப் பள்ளிகள், மூன்று மொழிகள் படிக்கும் மாணவர்கள், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சிக் கல்வி, வானளாவிய கட்டிட கட்டுமானங்களில் வளர்ச்சி, சாலைகளை நீரூற்றி சுத்தம் செய்யும் வாகன வசதிகள் அனைத்தும் ஏற்பட்டுள்ளதை விவரித்தார். இவற்றை கேட்டு மிகவும் வியப்பு அடைந்தேன்.
கலை தொடர்வது, மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி இலங்கை உக்குவளையிலிருந்து எ.எம். அகீலா எழுதிய கடிதம். இந்நிகழ்ச்சி வாழ்வுப் பாதையில் சற்று வேறுபட்டு நடைபோட்டதால், வெற்றியடைந்த மக்களை எங்களுக்கு அறிவிக்கின்றது. பல்வேறு துன்பங்களின் நடுவிலும் வளர்ந்து வந்துள்ளதால், அவர்களின் செயல்பாடு எங்களுக்கு தூண்டுதல் தருவதாக உள்ளது. சீன வானொலி வழங்கும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் நிகழ்ச்சிகள் தொடரட்டும்.


தமிழன்பன் மீனாட்சிபாளையம் கா.அருண் நடபுப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம் .சிறப்பு பயணம் மேற்கொண்ட நேயர்கள் சீன வானொலியை கேட்பதால், கேலி கிண்டல்களுக்கு ஆளான சூழ்நிலைகளை சுவைபட எடுத்து கூறினார்கள். அதில் குறிப்பாக பேளுக்குறிச்சி செந்தில் தனது உறவினர் ஒருவர் இதற்கு போய் இவ்வளவு செலவு செய்கிறாயா? என்று கிண்டலாக கேட்தற்கு மறுமொழியாக நீங்கள் பீடி சிகெரட்டுக்கு செய்யும் செலவை விட இதற்கு நான் செய்யும் செலவு மிக குறைவு தான் என கணக்கிட்டு கூறியது சரியான பதிலடி.
கலை அடுத்து, சீன உணவரங்கம் நிகழ்ச்சி பற்றி மணச்சநல்லூர் நா சண்முகம் எழுதிய கடிதம். அவரை உணவு பற்றிய குறிப்பு முழுவதும் சைவ உணவு குறிப்பாக அமைந்தது. குறைந்த செலவிலும், விரைவாகவும் செய்யக்கூடிய ஒன்றாக அது அமைந்தது. இந்த அவரை உணவு தயாரிக்க தமிழ் நாட்டில் கிடைக்கின்ற அவரைக்காய், அரிசி, இஞ்சி, பூண்டு, எண்ணெய், சோம்பு, மிளகு, வெங்காயம் ஆகியவை போதும் என்று அறிந்தபோது வியப்படைந்தோம். சுருக்கமாக சொன்னால் தமிழ் நாட்டு சுத்த சைவ உணவு வகைகளில் ஒன்றை சீனமுறைப்படி சமைக்க கற்றுக் கொடுத்தீர்கள். நன்றி

1 2