• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-27 16:51:02    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் தொடர்வது, இலங்கை புதிய காத்தான்குடியிலிருந்து ந.அ.அஹ்மத் நுஸ்றீ அனுப்பிய கடிதம். முகம் அறியாத என்னை போன்ற நேயர்களுக்கு தொடர்ந்து பதில் கடிதங்கள் எழுதி வரும் சீன வானொலிக்கு பாராட்டுக்கள். சீனாவிலிருந்து தமிழ் மொழியில் வானொலி ஒலிபரப்பு செய்யப்படுவது வியப்பளிக்கிறது. சீன தமிழொலி இதழ்கள் சீனாவை பற்றிய சிறப்பு செய்திகளை விரிவாக விளக்குகின்றன. சீன வானொலி நேயர்களில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கலை சீன கிராமப்புற சுகாதரா சீர்திருத்தம் பற்றி திருச்சி எம் தேவராஜா அனுப்பிய கடிதம். சீன கிராமப்புற சுகாதரா சீர்திருத்தத்தை உலக வங்கி வெகுவாக பாராட்டியுள்ளதை பற்றி இக்கட்டுரையில் கேட்டேன். அடிமட்ட மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள், தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெறுவது உலகெங்குமே எட்டா கனியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகளை தரும் கூட்டுறவு மருத்துவ முறைகளை சீனா உருவாக்கி செயல்படுத்துவது வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. பிற நாடுகளுக்கும் இது எடுத்துக்காட்டாக விளங்கும்.


மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் சில சுவையான தகவல்களை இடம்பெற்றன. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் தைவான் நீரிணை இருகரை உறவுச் சங்கம் நிறுவப்பட்டது, 1993 ஆம் ஆண்டு தாயாவன் அணுமின்நிலையம் மின்உற்பத்தியை துவக்கியது மற்றும் 1997 ஆம் ஆண்டு ஹாங்காங் பிரதேசம் தாய்நாட்டுக்கு திரும்பியது ஆகிய தகவல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக ஹாங்காங் பிரதேசம் தாய்நாட்டிற்கு திரும்பிய தகவலைப் பற்றி கேட்டபோது என் நினைவு அந்த ஆண்டிற்கு திரும்பியது. 1997 ஆம் ஆண்டு ஹாங்காய் தாய்நாட்டுடன் இணைந்த நிகழ்ச்சியை பிபிசி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. விழுப்புரம் நகரில் தங்கியிருந்த நான், அலுவலகத்திற்கு விடுமுறை தெரிவித்துவிட்டு முழுமையாக அந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தேன். அன்றியும், வாழ்த்துக்களைத் தெரிவித்து சீன வானொலிக்கு பேக்ஸ் என்ற தொலைநகல் செய்தியை அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் இல்லாத அக்காலத்தில், உடனடியாக கருத்துக்களைத் தெரிவிக்க எனக்கு தொலைநகல் வசதிதான் மிகவும் சிறந்ததாக இருந்தது.


பெருந்துறை, பல்லவி கே பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் வைர விழா கொண்டாட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் ஆற்றிய உரை ஆக்கபூர்வமானது. வெளியுறவு கொள்கைகளில் பல நாடுகளுக்கு இது பதிலாய் அமைந்தது. நிரந்தர அமைதியான, கூட்டுச் செழுமையான நல்லிணக்க உலகத்தின் கட்டுமானத்தை சீனா உலக மக்களுடன் இணைந்து முன்னேற்றும் என்றும் அவர் கூறினார். சீனா சர்வதேசப் பொறுப்புகளை ஏற்பதையும், அவற்றை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப் படுத்துவதையும் இது வெளிப்படுத்தியது.
புதுக்கோட்டை, ஜி. வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகள் நிறைவில் சீனாவின் வாகனத் தொழில்துறை அமோக வளர்ச்சிக் கண்டுள்ளதையும் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீன வாகனங்களின் பங்குகள் பற்றியும் செய்தி விளக்கம் வழியாக விரிவாக அறிந்துகொண்டேன். புள்ளிவிவரங்களின்படி சீருந்துடைய தனி நபர்களின் எண்ணிக்கையில் இன்று சீனா உலகில் 26வது இடத்தை வகித்தாலும் விரைவில் முதலிடம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. 1949 முதல் 1956 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது முதலாவது சீருந்து தயாரிப்புத் தொழில்சாலையை சீனா உருவாக்கியிருந்தாலும் இத்தகைய சாதனைகள் படைத்து வருவது பாராட்டுக்குரியது. வாகனத் தொழில் துறை வளர்ச்சியானது சீனப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூணாக இன்று மாறியுள்ளது
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
சீன அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாகும். எனவே நுகர்வு ஆற்றல் பிற நாடுகளை விட அதிகமாகவே இருக்கும். ஆகவே, பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் தொழில் துவங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாண்டு செப்டம்பர் திங்களில் சுமார் 2,200க்கு மேலான தொழில் நிறுவணங்கள் சீன அரசின் அனுமதியினை பெற்று சீனாவில் தொழில் துவங்கி இருப்பதை அறிந்தேன். வெளிநாட்டு நிறுவனங்களை தன்பால் ஈர்க்கும் மிகப்பெரிய உலக பொருளாதார சந்தையாக சீன மாறி வருவதை இது காட்டுகின்றது. இதற்கு 30 ஆண்டுகளாக செயல்படுத்தப் பட்டுவரும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி காரணமாகும்.
உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வேலுசாமி, அமுதாராணி, பி.டி.சுரேஷ்குமார் ஆகியோர் கேட்ட, 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஆயத்தப்பணிகள் பற்றிய கேள்விகளுக்கு தமிழ்ப்பிரிவு தலைவர் திருமதி.தி.கலையரசி அம்மையார் பதிலளித்தார். நினைவு நாணயங்கள் வெளியீடு பற்றி இதில் தெளிவுபடுத்தினார். சீனா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தி அகில உலக சாதனை படைத்துவிட்டது. 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சியையும் சாதனை படைக்கும் விதத்தில் நடத்தும் என்பதில் ஐயமில்லை.
தென்பொன்முடி.தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
மலர்சோலை நிகழ்ச்சி கேட்டேன். அதில் சீன மக்கள் தங்களின் பெயருடன் தேசியவிழாவை குறிப்பிடும் கோசிங் என்ப்பதை சேர்த்துள்ளதை அறிந்தேன். அப்படி கோசிங் பெயரை கொண்டவர்கள் சீனாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் உள்ளனர் என்ற தகவலால் வியப்படைந்தேன். தேசிய விழாவை குறிப்பிவதையே தங்களது பெயராக கொண்டிருக்கும் சீன மக்களை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.


1 2