• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-02 17:26:05    
வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்

cri

மேற்கூறிய நடவடிக்கைகள் தற்போது சீனாவில் பரவி வருகின்றன.

Luo xiaoming என்ற விவசாயத் தொழிலாளர், கடந்த ஆண்டின் ஏப்ரல் திங்களில் பணியிலிருந்து விலக்கப்பட்டார். ஊருக்குத் திரும்பிய பின், அவர், அரசு இலவசமாக வழங்கிய முயல் வளர்ப்புப் பயிற்சியை பெற்று, முயல்கள் மற்றும் விலங்குத் தீவனத்தை பெற்றார். தற்போது அவர் சொந்த முயல் வளர்ப்புத் தளத்தை உருவாக்கியுள்ளார். அவர் கூறியதாவது,

தற்போது ஒவ்வொரு முயலின் நிகர லாபம், 10 யுவான் ஆகும். நான் 600முயல்களை வளர்க்கிறேன். அதாவது 6 ஆயிரம் யுவான் லாபம் பெற முடியும். அரசின் கவனம் இல்லாதிருந்தால், நான் வீட்டில் சும்மா இருந்து பணம் சம்பாதிக்க முடியாமல் இருக்க நேரும் என்றார் அவர்.

வசந்த விழாவுக்குப் பின் ஊருக்குத் திரும்பிய விவசாய தொழிலாளர்களுக்கு மறு நேலை வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு, சீனாவின் சில மாநிலங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. விளம்பரம் மூலம் வேலை தெரிவுக் கூட்டம், வேலைவாய்பபுத் தகவல்கள் அறிவிப்பு, வேலைகளை அறிமுகப்படுத்தும் சேவை முதலியவற்றை அவை மேற்கொண்டன.

1 2 3 4 5