கலை அன்பான நேயர்களே! கருத்துக் கடிதங்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான நேயர் நேரத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடிதங்களை தொகுத்து வழங்குவதில் தமிழன்பனும் என்னோடு ஒத்துழைக்கிறார். தமிழன்பன் இந்நிகழ்ச்சியில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ஒலிப்பதிவுகள், கடித மற்றும் மின்னஞ்சல் பகுதிகள் இடம்பெறுகின்றன. இன்னும் பல நேயர்களின் கருத்துக்களை நிகழ்ச்சியில் இடம்பெற செய்வதற்கு ஏதுவாக, ஒலிப்பதிவு செய்து அனுப்பபப்படும் கருத்துக்கள் அதிகப்பட்சமாக ஒரு நிமிடத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள கேட்டு கொள்கின்றோம். கலை சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை ரெத்தின சுருக்கமாக, ஒரு நிமிடத்திற்கு மிகாமல் ஒலிப்பதிவு செய்து அனுப்புங்கள். கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலமும் உங்களின் மேலான கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள். தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகள் தெளிவாக ஒலிபரப்பாகும் அலைவரிசை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான அலைவரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டு இன்புறுங்கள். கலை இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, செய்திகள் பற்றி இலங்கை கினிகத்தேனை எம்.பி.மூர்த்தி எழுதிய கடிதம்.. இலங்கை உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க சீன அரசு உதவி வழங்க போவதை அறிந்தேன். போரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு இதுவொரு நல்ல செய்தி. இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழன்பன் தொடர்வது, நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி மீனாட்சிபாளையம் கா.அருண் எழுதிய கடிதம். சிறப்பு பயணம் மேற்கொண்ட நேயர்கள் சீன வானொலியை கேட்பதால், கேலி கிண்டல்களுக்கு ஆளான சூழ்நிலைகளை சுவைபட எடுத்து கூறினார்கள். அதில் குறிப்பாக பேளுக்குறிச்சி செந்தில் இதற்கு போய் இவ்வளவு செலவு செய்கிறாயா? என்று தனது உறவினர் ஒருவர் கிண்டலாக கேட்தற்கு மறுமொழியாக நீங்கள் பீடி சிகெரட்டுக்கு செய்யும் செலவை விட இதற்கு நான் செய்யும் செலவு மிக குறைவு தான் என கணக்கிட்டு கூறியது சரியான பதிலடி. கலை அடுத்ததாக, பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். புற்றுநோயின் வலியை குறைப்பது பற்றி வாணி வழங்கிய கட்டுரையை நலவாழ்வு நிகழ்ச்சியில் கேட்டேன். இந்நோயின் மூன்றுக் கட்ட தடுப்பு முறைகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். எயிட்ஸ் இல்லா உலகிற்கான புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி அறிவியல் உலகத்தில் விளக்கப்பட்டது. மெமரி டி என்ற உயிரணுக்களின் கண்டுபிடிப்பு எயிட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்துவதில் எதிர்காலத்தில் சிறந்த பங்காற்றும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
தமிழன்பன் இலங்கை காத்தான்குடியிலிருந்து எ.ஆர்.எப். சப்றானா எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகள் சீனாவை பற்றியும் உலகை பற்றியும் எங்களுக்கு விளக்குபவைகளாக உள்ளன. அவற்றில் சீனாவின் வரலாற்று பாதைகளையும், முக்கிய திருப்புமுனைகளையும் அறிமுகப்படுத்தும் சீன வரலாற்று நிகழ்ச்சியை மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து கேட்டும் வருகிறேன். கலை தொடர்வது, சீன மக்கள் ஆயுத காவல்துறை சட்டம் பற்றி மதுரை அண்ணாநகர் என்.இராமசாமி அனுப்பிய கடிதம். சீனாவில் நடைமுறையாகியுள்ள ஆயுத காவல்துறை சட்டத்தில் பல்வேறு புதிய விதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதையும், நான்கு வகை காவல்துறைகள் இருப்பதையும் அறிந்து கொண்டேன். ஆயுத காவல்துறை சீனாவின் ஆயுதப்படையின் ஒரு பகுதி என்பதும் இந்நிகழ்ச்சி மூலம் அறிய முடிந்தது. தமிழன்பன் சீன உணவரங்கம் நிகழ்ச்சி பற்றி குடியாத்தம் கே.மகராஜன் அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சயில் இறால் மீன் உணவு தயாரிப்பது பற்றி விளக்கப்பட்டது. இதில் பூசணி, நூடுல்ஸ் சேர்ப்பது குறித்தும் விளக்கினர். இந்த உணவு வகை கடலோர மக்களால் எளிதாக செய்யக்கூடியதாய் இருக்கும். சுவையான இரால் மீன் உணவு தயாரிக்க வழிகாட்டிய சீன வானொலிக்கு நன்றிகள்.
1 2
|