• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-03 15:06:37    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
தாய்லாந்தின் ஹூவா ஹின் நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியநாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ், இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்குடன் சந்தித்துரையாடினார். இந்தியாவுடன் வலுவான, நலமான உறவை ஏற்படுத்திக்கொள்ள சீனா விருப்புவதையும், இந்தியாவும் சீனாவும் ஒற்றுணைந்து முன்னேற வேண்டுமென்றும் வென்சியாபாவ் தெரிவித்தார். சீன இந்திய உறவில் எற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை சாத்தியமாக்கும் இணக்க முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.


வளவனூர்புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்.
செய்தி விளக்கத்தில், திபெத் வளர்ச்சி பற்றிய இந்திய நிபுணரின் கருத்து என்ற கட்டுரை இடம்பெற்றது. த ஹிந்து பத்திரிகையின் தலைமை பதிப்பாசிரியர் நரசிம்ஹன் ராம் அவர்கள், ரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில், திபெத்தின் வளர்ச்சி பற்றிய உண்மையான கருத்துக்களை எடுத்துக் கூறியதற்காக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்மையில், திபெத் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட நான், திபெத் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலையை நேரடியாக கண்டுணர்ந்தேன். தாய்நாட்டின் ஒன்றிணைப்பிற்குப் பின், திபெத்தின் மகத்தான வளர்ச்சிப் போக்கை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சில மேலை நாடுகள், எதிர்காலத்தில் திபெத்தின் உண்மையான நிலைமையை புரிந்து கொள்ளும்.
அமெரிக்கா, ஆல்பர்ட் அனுப்பிய மின்னஞ்சல்
பெரும் சாதனைகளைப் பெற்ற ஐரோப்பிய பயணம் என்ற கட்டுரை கேட்டேன். வெற்றிகரமான நட்பார்ந்த ஒத்துழைப்பு மிகுந்த பண்பாட்டு பயணமாக சீனத் துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் வெளிநாட்டு பயணம் அமைந்ததாக சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சாங் செய்ஜுன் தெரிவித்ததிலிருந்தே அப்ப‌யண‌த்தின் வெற்றியை புரிந்து கொள்ள முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறந்த நாகரிகங்களிள் நல்ல அம்சங்களை சீன மக்களின் நாகரிக உள்ளடக்கங்களோடு இணைத்து மேலும் செழுமைப்படுத்த சீனா விரும்புகிறது என்ற‌ க‌ருத்து போற்றுத‌ற்குரிய‌து. இது, சீனாவை மிக‌ச் சிற‌ந்த‌ நாடாக‌ உல‌க‌ம‌க்க‌ள் எதிர்கால‌த்தில் நோக்குவதற்கு சரியான அடிப்படையிடும்.

திமிரி, புலவர்.வீர ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்
மூமலை பள்ளத்தாக்கு நீர்சேமிப்புத் திட்டப்பணி பற்றிய தகவல்களை சீன வானொலியில் கேட்டேன். மூமலை பள்ளத்தாக்கில் 175 மீட்டர் உயர நீர் தேக்கப்பணி ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், 17 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யாங்சி ஆற்றின் மூமலை பள்ளத்தாக்கு நீர்சேமிப்புத் திட்டப்பணியின் கட்டுமானம் பன்முகங்களிலும் நிறைவு பெறுவதையும் அறிந்தேன். வெள்ளப்பெருக்கு தடுப்பு, மின் உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, குடிநீர் வினியோகம் முதலிய பன்னோக்க பயனுடைய இத்திட்டப்பணி உலகில் மிகப்பெரிய நீர்சேமிப்பு மற்றும் மின்னுற்பத்தி திட்டப்பணியாக உள்ளதையும் தெரிந்து கொண்டேன்.
ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் 2010ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காயில் நடைபெறவிருக்கும் உலகப் பொருள்காட்சியின் மங்களச் சின்னமான ஹாய்பாவ் சின்னத்தின் தலைமுதல் பாதம் வரையான சிறப்பம்சங்களையும், அவை விளக்கும் பொருளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தால் தான் மனிதர்கள், இயற்கை, சமூகம் ஆகியவற்றுக்கிடையில் நிரந்தரமான இணக்கம் ஏற்படும் என்ற அற்புதத் தத்துவத்தை உணர்த்தும் ஷாங்காய் உலகப் பொருள்காட்சியை வரலாறு போற்றற்றும்.

விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் ஓகோ எந்தன் பேபி... என்ற காலத்தை வென்ற பாடல் ஒலிக்கக் கேட்டேன். இதுபோன்ற இனிமையான பாடல் ஒலிக்காதா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா என்ற பாடல், இனிமையும் மென்மையும் கலந்து கேட்பவர் மனம் நிறைய செய்யும் பாடலாகும். என்னைப் போன்றோருக்கு இம்மாதிரியான பாடல்கள்தான் இதயத்திற்கு வலுவூட்டுவதாக அமையும். காலத்தை வென்ற இம்மாதிரியான மென்மையான பாடல்களை தொடர்ந்து வழங்குங்கள்.

செந்தலை N.S. பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
நவசீனா வைரவிழா சிறப்பு நிகழ்ச்சியில் நேயர்களின் வாழ்த்துரைகளை சீன தமிழ் ஒலிபரப்பில் கேட்டதை மகிழ்ச்சியான விடயமாக கருதுகின்றேன். பல முன்னணி நேயர்களின் வாழ்த்துக்களை பதிவுசெய்து அவர்களின் குரலகளை நம்மனைவரையும் கேட்க செய்த சீன வானொலி நேயர்மன்ற தலைவர் திரு.எஸ்.செல்வம் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறான புதிய முயற்சிகள் சீன வானொலி தமிழ்ப்பிரிவில் தொடர வாழ்த்துக்கள்.


1 2