• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-10 09:37:00    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் அனுப்பிய கடிதங்களில் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து இந்நிகழ்ச்சியில் வழங்குகின்றோம்.
கலை நிகழ்ச்சிகள் பற்றிய உங்களது எண்ணங்களை பாராட்டாகவும், ஆலோசனைகளாகவும், தனிப்பட்ட கருத்துகளாகவும் வழங்கிவரும் உங்களது ஆதரவுக்கு நன்றி. இத்தகைய ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டுமென்று, அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, ஒலிப்பதிவு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, நீலகிரி கீழ்குந்தா கே கே போஜன் அனுப்பிய கடிதம். சீனாவின் வைரவிழா கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. உலகின் பல்வேறு ஊடகங்களும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டன. தமிழகத்தில் தினமணி செய்திதாள் புகைப்படத்தோடு இந்த செய்திகளை வெளியிட்டது. இராணுவ அணிவகுப்பில் பெண்களும் மிடுக்குடன் அணிவகுத்து சென்றது சீனா பின்பற்றும் சமத்துவ கொள்கையை உலகிற்கு அறிவித்தது என்றே சொல்ல வேண்டும்.


தமிழன்பன் திபெத்தில் பயணம் மேற்கொண்ட திரு செல்வம் அவர்களின் அனுபவ அறிவிப்பு பற்றி மணச்சநல்லூர் ந.சண்முகம் எழுதிய கடிதம். உலகத்தின் உச்சியாம் இமயமலையோடு ஒட்டி அமைந்திருக்கும் திபெத்திற்கு பயணம் மேற்கொண்ட திரு. செல்வம் அங்கிருந்து தனது அனுபவங்களை அறிவித்தது இனிதாக தமிழ் குரலாக, தமிழனின் குரலாக அமைந்தது. அவர் அறிவித்த இடங்களை பற்றி பின்னணியை தெளிவாகவும், விளக்கமாகவும் தந்தார். மன்னர் ஆட்சியிலிருந்து இன்று வரையான வளர்ச்சியை படிப்படியாக தெரிய வைப்பதாகவும் அவரது அறிவிப்பு இருந்தது.
கலை வெளிநாட்டவர் பார்வையில் சீனா என்ற நிகழ்ச்சி பற்றி திருச்சி எம்.தேவராஜா அனுப்பிய கடிதம். இதில் தென் கொரிய நாட்டவரின் கருத்துக்களை கேட்டேன். நவ சினா உருவானபின் குறிப்பாக 1978 யில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை நடைமுறையான பின்னர், சீன அரசின் கொள்கைகளிலும், மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளிலும் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களை அனுபவித்ததாக தென் கொரிய நாட்டவர் தெரிவித்திருந்தனர். சென்துங் கொரிய எல்லைபுறத்தில் இருப்பதை சாதகமாக கொண்டு, சீனா தென் கொரிய எல்லைபுற வர்த்தகத்தை செழித்தோங்க செய்ததையும் இதன்மூலம் அறிய முடிந்தது.

தமிழன்பன் கோவை எம்.சோமசுந்தம் அனுப்பிய கடிதம். எனக்கு 1978 ஆம் ஆண்டு சீ வானொலி அறிமுகமானது. பீக்கிங் வானொலி என்று அரை மணிநேரமே ஒலிபரப்பானது, சீன வானொலியாக இன்று ஒருமணிநேர நிகழ்ச்சிகளை கொண்டு, நான்கு மணிநேரம் ஒலிபரப்பாகிறது. மேலும், பலர் நேயர்கள் சீன வானொலியோடு உடனடியாக தொடர்புக்கொள்ளும் வசதி இன்று ஏற்பட்டுள்ளது. நேயர்கள் நிகழ்ச்சிகள் பற்றி அனுப்புகின்ற கடிதங்களும் இரு வாரத்திற்குள் சென்றடைகின்றன. நேயர் நேரத்தில் நேயர்களின் கருத்துக்கள் தொகுக்கப்படுகின்றன. நேயர் கடிதம், நேயர் விருப்பம், உங்கள் குரல், நட்புப்பாலம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பல நேயர்களை அறியமுடிகிறது. நேயர்களுக்குள் பல தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன.


கலை மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகா தேவி அனுப்பிய கடிதம். சீன செய்யுள்கள் இசைப்பாடல்களாக குறுந்தகட்டில் வெளிவருவது, தொன்னாப்பிரிக்காவில் சீன கேளிக்கை பூங்கா, புத்தர் குகைகள் என அரிய பல தகவல்களை அள்ளிதருவதாய் அலர்ச்சோலை அமைந்தது. சீனப்பண்பாடு வளர்வதையும், வெளிநாடுகளி்ல் பரவுவதையும் இச்செய்திகள் குறிப்பாக உணர்த்தின.
தமிழன்பன் இலங்கை காத்தான்குடியிலிருந்து மு.ஹூ.பா.ஷிபா சீன வானொலியின் பங்களி்ப்பு பற்றி எழுதிய கடிதம். வானலைகளில் தவழ்ந்து, எமது உள்ளங்களில் தெனிசை தென்றலாய் வீசி வரும் சீன வானொலி நமது வாழ்கையோடு ஒன்றாகிவிட்டது என்று சொல்லாம். தமிழ் பேசும் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் அரிய பணிக்கு சேவைபுரியும் சீன வானொலி பணி வாழ்க.
கலை மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி மீனாட்சிப்பாளையம் கா. அருண் அனுப்பிய கடிதம். கைவான் நீரிணையின் இருகரை வளர்ச்சி பற்றிய கட்டுரை கேட்டேன். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கருத்துக்கள் சீன தைவான் இருகரை உறவு பரிமாற்றத்தில் ஆழமான செல்வாக்கை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம். சிறு செயல்பாடுகள் பெரிய தாக்கங்களை உருவாக்குவது போல, இந்த பேச்சுவார்த்தையின் பயன்களும் அமையும்.

1 2