• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-10 09:37:00    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
நவம்பர் திங்கள் 2 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். செய்திகளில் The Washington Post எனும் அமெரிக்க செய்திதாள், சீனாவின் கடந்த அறுபதாண்டுக்கால வளர்ச்சி பற்றி பாராட்டி எழுதியிருக்கும் கட்டுரையின் இரத்தினச் சுருக்கத்தை முனைவர் ந.கடிகாசலம் விவரித்தார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இச்செய்திதாள், சீனாவின் கடந்த அறுபதாண்டுக்கால வளர்ச்சியை பாராட்டி கட்டுரை வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அமெரிக்கா 100 ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை பெற்றது. சீனா விடுதலையாகியோ 60 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனாலும், அமெரிக்காவை விட, நலன்வாய்ந்த வளர்ச்சிகளை சீனா பெற்றிருக்கிறது. சராசரி மனித ஆயுளாகட்டும், கட்டாயக் கல்வி ஆகட்டும், தற்போது உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக சீனா மாறிவிட்டது.
நாகர்கோயில், பிரின்ஸ் ராபட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
சீன முஸ்லிம்கள் மெக்கா புனிதப்பயணம் மேற்கொள்வது பற்றி சீன வானொலி ஒளிபரப்பியது மிகவும் அருமை. இவ்வாண்டு 12 ஆயிரத்து 700 சீன முஸ்லிம்கள் மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளை விட மிக அதிகம் என்பதை தெரிந்து கொண்டேன். சீன அரசு, முஸ்லிம்களுக்கு இவ்வாறு மத சுதந்திரம் கொடுக்கும்போது, பிரிவினைவாத சிந்தனை கொண்டவர்கள், சீன அரசுக்கு எதிராக செயல்பாடுகளை தூண்டிவிடுவதும், அதற்கு சில நாடுகள் ஆதரவளிப்பதும் கண்டிக்கத்தக்கதாகும்.


வளவனூர் இராமபத்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
பெங்களூருவில் நடைபெற்ற இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு பற்றி கேட்டேன். இந்த சந்திப்பு ஆசியாவில் ஒரு வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்தால் எந்தவொரு மேலாதிக்க நாடும் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முடியாது.
தென்பொன்முடி, தெ. நா. மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியில் சீன மக்களின் 40 ஆண்டுகால கனவான சிங்காய்-திபெத் இருப்புப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டதையும், அது கட்டியமைக்கப்ட்ட விதம் பற்றியும் கூறக்கேட்டேன். சீன மக்களின் கடின உழைப்பின் மாபெரும் சாதனை செயல்பாடான சிங்காய்-திபெத் இருப்புப்பாதை அமைப்புப் பணிகளை டிஸ்கவரி தொலைக்காட்சி தமிழில் ஒளிபரப்பியதை பார்த்து வியப்படைந்தேன். கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரத்தில் ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் தூரத்திற்கு, பலவித இன்னல்களை தாங்கி கொண்டு திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே பணிகளை முடித்த பணியாளர்களின் தன்னலமற்ற தொண்டை பாராட்ட வேண்டும். பனி, மழை என இயற்கை சூழ்நிலைகளை தாங்கிக்கொள்ளும் தொழில்நுட்பங்களோடு இடப்பட்டுள்ள இந்த இருப்புப்பாதைக்கான பணிகளை தொலைக்காட்சியில் பார்த்து பெருமிதம் அடைந்தேன். சீனாவுக்கு சென்று சிங்காய்-திபெத் இருப்புப்பாதையில் பயணித்த அனுபவத்தை அந்த ஒரு மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்தது. அப்போது நான் பெற்ற இன்ப அனுபவத்தை சீன வானொலி நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.


ஊட்டி, S.K.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
கடந்த வெள்ளிக்கிழமை அரியலூர் மாவட்ட சீன வானொலி நேயர்கள் மன்றம் வழங்கிய உங்கள் குரல் நிகழ்ச்சியில் திரு.கண்ணன் சேகர் சீனாவைப் பற்றி கூறியதைக் கேட்டேன். வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரியமும் மிக்க பெய்சிங் மாநகர மக்கள் நெகிழி பைகளுக்குப் பதிலாக தாள் பைகளை பயன்படுத்துவதை அவர் எடுத்துரைத்தார். மேலும், இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டி, ரிக்சா ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெய்சிங் மக்கள் கொண்டுள்ள கவனத்தை வெளிப்படுத்தியது. சீன அரசுடன் இணைந்து மக்களும் சுற்றுச்சுழலை பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்வது, உலக சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கு கடமையுணர்வோடு, செயல்படுவதில் சீன மக்கள் முன்னோடிகள் என்பதை உணர்த்துகிறது.
சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீனாவின் எரியாற்றல் வளர்ச்சி பற்றி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசியும் நேயர் நாச்சிமுத்துவும் கலந்துரையாடியதைக் கேட்டேன். சீனாவில் எரியாற்றல் உற்பத்தி, அதனை சிக்கனமாக செவழிக்கும் திட்டங்களின் அவசியம் சிந்தைக்கு விருந்தாக தந்தது இந்நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நாச்சிமுத்து வினா தொடுக்க, கலையரசி அவர்கள் பதில் வழங்கியது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.


திருச்சி அண்ணா நகர் வீட்டிஆர் அனுப்பிய மின்னஞ்சல்
தலை கேட்ட மன்னன் கதையை சீனக்கதை நிகழ்ச்சியில் கேட்டேன். கண்மூடித்தனமாக தலைவன் பின்னால் சென்றால், அப்படி செல்வோரின் முதுகிலேறி அவர்கள் சவாரி செய்வார்கள் என்பதை இக்கதை உணர்த்தியது. பகட்டு காட்டி, தன்னையும் தனது குடும்பதையும் வளர்த்துக்கொண்ட ஒரு சில தலைவர்கள் அக்காலத்திலேயே இருந்திருப்பதை இக்கதை எடுத்துரைத்தது. ஊரையும் உலகையும் ஏயித்து வருவோரின் செயல்கள் நீண்டநாள் நீடிக்காது என்பதையும் இது உணர்த்தியது.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன துணை அரசுத்தலவர் ஷிச்சின்பீங் அதிகாரப்பயணமாக பெல்ஜியம் ஜெர்மனி பல்கேரிய ஹங்கேரி,ருமேனியா ஆகிய 5 நாடுகளில் பயணம் மேற்கொண்டு திருப்பியுள்ளார். ஐரோப்பிய-சீன கலை விழா, ஃபிராங்போர்ட் புத்தக்க் கண்காட்சி துவக்க விழா என முக்கிய நடவடிக்கைகளில் பங்குக்கொண்டார். நட்பார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி சீன ஐரோப்பிய நாடுகளின் இடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து வெற்றிகரமான பண்பாட்டு பயணமாக அமைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு பரிமாற்றத்தில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் புரிந்துணர்வு, தலைசிறந்த பண்பாட்டு செல்வங்களை அறிமுகப்படுத்துதல் பாராட்டுக்குரிய விடயங்கள்.
வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்
அறிவியல் உலகம் நிகழ்ச்சியை செவிமடுத்தேன். சீனாவில் தயாரிக்கப்படும் நீரிலும், நிலத்திலும் இறங்கி, இங்கிருந்தே மேலேழுந்து பறக்கக்கூடிய விமானங்கள் பற்றிய செய்தி நன்றாக இருந்தது. இது போன்ற கண்டுபிடிப்புகள் இக்காலத்தில் தோன்றியுள்ள பல அறைகூவல்களை சமாளிக்க பல விதங்களில் பயன்படலாம்.


1 2