• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-17 09:50:43    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழன்பன் கருத்துக் கடிதங்கள் எழுதிவரும் உங்களின் பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும்.
கலை ஆம் நேயர்களே, வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு அவற்றை பற்றி எங்களுக்கு தொடர்ந்து எழுதுங்கள். மின்னஞ்சல் மூலமாகவும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
தமிழன்பன் சரி. இனி நிகழ்ச்சிக்கு செல்வோமா? இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.


கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, கோவில்பட்டி ஜி.கிருஷ்ணமூர்த்தி அனுப்பிய கடிதம். நட்புப்பாலம் நிகழ்ச்சியில் விழுப்புரம் எஸ்.பாண்டியராஜனின் நேர்முகத்தை கேட்டேன். இவர் 42 ஆண்டுகால அனுபவத்தை கூறியவிதம் என்னை நெகிழ வைத்தது. பல்வேறு பண்பலைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளங்களை ஆக்கிரமித்துள்ள இன்று, சிற்றலை ஊடாக சீன வானொலி நிகழ்ச்சிகளை 42 ஆண்டுகளாக கேட்டு பயனடையும் அவரை பாராட்ட வேண்டும்.
தமிழன்பன் அடுத்தாக, இலங்கை புதிய காத்தான் குடியிலிருந்து எ.எம்.சப்ரி தாங்கா ஓவியங்கள் பற்றி எழுதிய கடிதம். சீன தனிசிறப்புமிக்க தாங்கா ஓவியங்கள் பற்றி சீன வானொலி வழங்கிய தகவல் வியப்பளித்தன. பட்டுதுணியில், மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்து உருவான வண்ணங்களை தீட்டி வரையப்படும் இந்த ஓவியக்கலை, இன்றும் நிலைத்து வளர்ந்து வருவது எனக்கு ஆச்சரியம் தான். நீங்கள் அனுப்பி தந்த சீனத் தமிழொலி இதழில் இடம்பெற்ற தாங்கா ஓவிய படம், இந்த ஓவியத்தை பார்க்க நான் கொண்டிருந்த கனவை நனவாக்கியது.
கலை தொடர்வது, செல்வம் அவர்களின் சீனப் பயணத்தை பற்றி விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய கடிதம். திபெத்தில் கண்டுரசித்த சீன சிறப்பியல்புகளை செல்வம் நேயர்களுக்கு தெளிவாக விளக்கினார். பயணக்கட்டுரை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாகும். இந்தியாவில் பயணம் செய்த யுவாங்சுவாங்கின் பயண அனுபவங்கள் இன்றும் வரலாற்று பதிவுகளில் உள்ளன. அதுவே மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வும் உதவுகிறது. அதுபோல செல்வம் அவர்களின் திபெத் பயண அனுபவங்கள் சீன மக்களை இந்தியர்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.


தமிழன்பன் சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி தார்வழி பி முத்து எழுதிய கடிதம். சீனாவின் சிறுபான்மை மக்கள் அதிகமாக குழுமி வாழும் லூசியாங் பள்ளதாக்கு பற்றி இந்நிகழ்ச்சியில் அறிந்து கொண்டேன். லுசியாங் பள்ளதாக்கு, தொங்குபாலம், இயற்கையான தீவுப் பகுதி என பல அருமையான இயற்கைக் காட்சிகளை எங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய சீன வானொலிக்கு எமது நன்றி
கலை அடுத்து, கரூர் ரதி சீனத் தமிழொலி இதழ் பற்றி எழுதிய கடிதம். திபெத்திலுள்ள சுற்றுலா இடங்கள் போத்தலா மாளிகை, ஜோகாங் கோயில், பர்கார் தெரு, ஷிகாசே நகரம், சொங்மோலிங்மா சிகரம், நிங்ச்சி, பாசும்கோ ஏரி ஆகியவற்றை சீன தமிழொலி இதழ் அறிமுகப்படுத்தியது. வெண்ணெய் விளக்கு விழா, வெண்ணெய்யால் தயாரிக்கப்படும் புத்தர் உருவ சிலைகள் சீனர்களின் பண்பாட்டையும் கலை திறன்களையும் பறைசாற்றின.


தமிழன்பன் தொடர்வது, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி மதுரை திருமங்கலம் பி.கதிரேசன் எழுதிய கடிதம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற சொற்களை இந்நிகழ்ச்சியில் தெளிவாக சொல்லி தருகின்றனர். பாராட்டுக்கள். ஆனால் அவர்கள் உச்சரிப்பது போன்று நாங்களும் உச்சரிப்பது சற்று கடினமாகவே உள்ளது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
கலை மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி இலங்கை வட்டவளை எம்.வீ.எஸ். யோகராஜா அனுப்பிய கடிதம். எரியாற்றல் சிக்கனம் பற்றி ஒலிபரப்பியது, அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று எண்ணுகிறேன். எரியாற்றல் சிக்கன செயல்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும்போது எரியாற்றலை சிக்கனமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, மின்சார விளக்குகளை பயன்படுத்த அறிவுறுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.


தமிழன்பன் காரியாப்பட்டினம் சிவ.ஜெய்சங்கர் செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். சீன-மியான்மார் எல்லையில் உள்ள அகதிகளை திரும்ப அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பும் திட்டங்களை சீனா தொடங்கியுள்ளதை கேட்டேன். அண்டை நாட்டு மக்களுக்கு சீனா காட்டும் நட்புறவு செயல்பாடுகளை விளக்குவதாய் இது உள்ளது. மேலும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிப்பாதை பற்றி தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கின் கூற்று, அமெரிக்க அரசியலில் இந்தியர் முக்கிய பொறுப்பு வகிப்பது என பல தகவல்களை அறிய முடிந்தது. செய்திகளை செய்தி விளக்கங்களோடு விரிவாக வழங்குவது பாரட்டுக்குரியது.
கலை ஆரணி இ.நரேஷ் நவ சீன வைரவிழா சிறப்பு நிகழ்ச்சியில் ஒவிபரப்பான சீனாவின் விண்வெளித்துறையின் வளர்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனா பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. சீன வீரர்கள் விண்வெளியில் முதல் முறையாக நடந்து சாதனைப் படைத்துள்ளனர். சீன விமான துறையும், அறிவியல் தொழில் துறையும் மாபெரும் வளர்ச்சிகளை கண்டுள்ளன. இத்தகைய விபரங்களால் விண்வெளி தொழில் நுட்பங்களை சீனா முழுமையாக கிரகித்துள்ளதை அறிய முடிந்தது.

1 2