• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-17 09:50:43    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணைய தளத்தில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சீன அரசுத்தலைவர் ஹு சிந்தாவின் பயணம் பற்றிய செய்தியை வாசித்தேன். இப்பயணம் முத்தரப்பு நட்புறவை வளர்க்க அடிப்படையிடும். இவ்வாறு, உலக நாடுகளில் சீனத் தலைவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு தூதாண்மை பயணங்கள் சீனாவின் வளர்ச்சிக்கு வித்திடுவதை யாராலும் மறுக்க முடியாது.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன துணை அரசுத்தலவர் ஷிச்சின்பீங் அதிகாரப்பூர்வ பயணமாக பெல்ஜியம் ஜெர்மனி பல்கேரிய ஹங்கேரி,ருமேனியா ஆகிய 5 நாடுகளில் பயணம் மேற்கொண்டு திருப்பியுள்ளார். ஐரோப்பிய-சீன கலை விழா, ஃபிராங்போர்ட் புத்தக்க் கண்காட்சி துவக்க விழா என முக்கிய நடவடிக்கைகளில் பங்குக்கொண்டார். நட்பார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி சீன ஐரோப்பிய நாடுகளின் இடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து வெற்றிகரமான பண்பாட்டு பயணமாக இது அமைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு பரிமாற்றத்தில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல் புரிந்துணர்வு, தலைசிறந்த பண்பாட்டு செல்வங்களை அறிமுகப்படுத்துதல் பாராட்டுக்குரிய விடயங்கள்.


தென்பொன்முடி, தெ. நா. மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீன திருமண பழக்க வழக்கங்களை தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசியும் திரு செல்வமும் கலந்துரையாடல் மூலம் விளக்கினர். இருமனம் இணைவதன் அச்சாரமாக இருப்பதுதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண சடங்குமுறை பழங்காலம் தொட்டே பல்வேறு வழிமுறைகளில் நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவிலும் சீனாவிலும் காணப்படும் பல ஒத்த நடைமுறைகள் வியப்பு அளிக்கின்றன.


வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
நவசீனாவின் வைரவிழா என்னும் சிறப்பு நிகழ்ச்சியில், சீனாவின் மாபெரும் சாதனைகள் என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது 75 வயது ஆகும் வாங்மங் அவர்களின் பார்வையில் சீனா எவ்வாறெல்லாம் முன்னேற்றம் அடைந்தது என்பதை இன்றைய சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த ஆண்டுகளில், வென்சுவான் நிலநடுக்கம், தாங்ஷான் நிலநடுக்கம், சார்ஸ் என்றழைக்கப்பட்ட மூச்சுத் திணறல் நோய் என மாபெரும் இடர்ப்பாடுகளை சீனா சந்தித்தது. ஆனால் கடும் நிகழ்வுகளை வெல்லும் மனஉறுதி சீன மக்களுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சீனா அனைத்து இடர்ப்பாடுகளையும் தகர்த்தெறிந்து தனது ஆற்றலை உலகிற்கு புரிய வைத்துள்ளது. சமூக ஒற்றுமையுள்ள நாடே போட்டியாற்றல் மிக்க நாடு என்ற பேரூண்மையின் அடையாளமாக சீனா மாறியுள்ளது.


மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் சளிக்காய்ச்சல் ஏ நோயின் பரவல் விரைவாகியுள்ளது. இந்நோய் பரவும் நிலை மேலும் கடுமையாக மாறக்கூடும் என்று தடுப்புப்பணிகளில் சாதகமான வெற்றிகளை பெற சீனா முயற்சிக்கிறது. சீன அரசு உரிய நேரத்தில் செயல்படுத்துகின்ற நடவடிக்கைகளால் நோய் பரவல் நிலைமை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
உலக மருத்துவ துறையை ஆட்டிபடபடைத்துக் கொண்டிருக்கும் சளிக்காய்ச்சல் ஏ நோய்க்கான தடுப்பூசியினை சீனா உலகில் முதன்முதலாக கண்டுபிடித்துள்ளது. அதனை சுமார் 40 இலட்சம் பேருக்கு வெற்றிகரமாக வழங்கியுள்ளதையும் அறிந்தேன். இக்கண்டுபிடிப்பு உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் சீன மருத்துவத்துறை அளித்திட்ட மிகப்பெரிய நன்கொடையாகும். சார்ஸ் நோயையே வெற்றிகரமாக சமாளித்த சீன சுகாதாரதுறை இப்பிரச்சினையும் வெற்றிகரமாக சமாளிக்குமென உறுதியாக நம்புகின்றேன்.


நாகர்கோயில், பிரின்ஸ் ராபட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் குடும்ப நல திட்டம் பற்றி சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி அருமை. மக்கள் தொகையை சீனா கட்டுபடுத்திய வழிகளை இந்நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் 40 கோடி குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. அதனால் உலக மக்கள்தொகை 600 கோடியை எட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. சீன அரசின் குடும்ப நல திட்டம் உலகிற்கும் பங்காற்றியுள்ளதை அறிய முடிகிறது.


வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்
அறிவியல் உலகம் நிகழ்ச்சியை செவிமடுத்தேன். சீனாவில் தயாரிக்கப்படும் நீரிலும், நிலத்திலும் இறங்கி, அப்படியே மேலேழுந்து பறக்கக்கூடிய விமானங்கள் பற்றிய தகவல் நன்றாக இருந்தது. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் இக்காலத்தில் தோன்றியுள்ள அறைகூவல்களை சமாளிக்க பல விதங்களில் பயன்படலாம்.


ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
பெய்சிங் மாநகரின் தேசிய ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ள சீன அறிவியல் தொழில் நுட்பக் காட்சியகம் பற்றி நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் கேட்டேன். அண்மையில் தான் அது பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. 48 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த புதிய பூங்கவை தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கன சதுரம் போல் அமைந்துள்ளது போன்ற விரிவான தகவல்களுடன் அமைந்திருந்த இந்நிகழ்ச்சி அருமை.


உத்திரக்குடி சு.கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியை செவிமடுத்தேன். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கூட தெரியாத புதுமை செயல்கள் ஐந்தறிவு படைத்த பறவைகளுக்கு இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. ஆகையால் தான் இன்றைக்கும் நாயை நன்றியுள்ள விலங்காகவும், வீட்டில் பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ் ஆகியவைகளை வளர்த்து வருகின்றோம். இந்நிகழ்ச்சியில் பறவைகள் மனித குலத்தின் நண்பர்கள் என்றது புதிய சிந்தனை. மனிதர்களுக்கு உதவுவது மனித நேயமாக இருப்பதுபோல பறவைகளுக்கு முதலுதவி செய்வதும் மனித நேயமே என்பதை ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கும் தகவல் உணர்த்தியது. இயற்கை புகலிடம் என்பதை விட மனித நேய மகிழ்விடம் என்பதே பொருந்தும்.


1 2