• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 09:54:30    
வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டம்

cri
வறிய பிரதேசத்தில் படிப்பை இடை நிறுத்திய பெண் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப உதவியளிக்கும் பொது நல திட்டம் சீனாவில் இருக்கிறது. வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 1989ஆம் ஆண்டு தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கு பிந்தைய இன்று, அப்போதைய சிறுமிகள் அழகான மலர்களைப் போல் வளர்ந்தனர். மிக முன்னதாக உதவித் தொகை பெற்ற பெண் குழந்தைகள் வேலையில் ஈடுபட்டு, வறிய பிரதேசத்தின் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலைமையை மேம்படுத்தும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டத்தினால் பயன் பெற்ற தொங் இன இளம் பெண் Huang Jingmei பற்றி கூறுகின்றோம்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் Rong Shui மியௌ இனத் தன்னாட்சி மாவட்டத்தின் தொழில் முறை கல்வி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடிய பாடலாகும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Rong Shui மாவட்டத்தில், மியௌ, தொங் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர். மலைப் பிரதேசத்தில் வாழ்வதால், தங்கு தடையற்ற தகவல் கிடைக்காத நிலையும் பொருளாதாரம் பின்தங்கிய நிலையும் உள்ளது. குறிப்பாக பழைய கருத்தின் காரணமாக, இங்குள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் கல்வி பயிலும் வாய்ப்பு மிகக் குறைவு.
Huang Jingmei என்பவர் இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்தவர். அவரது வீடு Rong Shui மாவட்டத்தின் மலைப் பிரதேசத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. Huang Jingmeiயும் அவரது 4 சகோதர சகோதரிகளும் கல்வி பயின்ற போது, கல்விக் கட்டணமும் வாழ்க்கைச் செலவும் குடும்பத்துக்கு கடும் சுமையாக இருந்தது. Huang Jingmei கூறியதாவது—

"என் தந்தை பாடுபட்டு உழைத்தார். பல பன்றிகளையும் மாடுகளையும் அவர் வளர்த்தார். ஆண்டு தோறும் எங்கள் கல்விக் கட்டணத்துக்காக 9 பன்றிகளையும் 2 மாடுகளையும் விற்க வேண்டியிருந்தது. விவசாயக் குடும்பத்தை பொறுத்தவரை இது எளிதானதல்ல. என் மூத்த அக்கா 18 வயதில் வேலை செய்யத் துவங்கினார்" என்று Huang Jingmei கூறினார்.
1993ஆம் ஆண்டு, Rong Shui தேசிய இன இடைநிலைப் பள்ளியின் முதலாவது மாணவி வகுப்பின் நுழைவுத் தேர்வில் Huang Jingmei வெற்றி பெற்றார். ஆனால் மென்மேலும் அதிகமான கல்வி கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் அவரது வளமற்ற குடும்பம் ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின் Huang Jingmeiயின் தந்தை கடும் நோய்வாய்ப்பட்டார். அவரது மூத்த அக்காவுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கொடுக்கப்படவில்லை. அவரது குடும்பம் வருமானமின்றி தவித்தது. இதனால் கல்வி பயிலும் வாய்ப்பை Huang Jingmei கிட்டத்தட்ட இழந்தார்.
"கிடைக்கக் கூடிய பணம், தந்தையின் நோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது. நான் சொந்தமாக 20 யுவான் கடன் வாங்கி பள்ளிக்குச் சென்றேன். அத்தகைய நிலையிலும் கல்வி பயிலும் கனவை நான் கைவிடவில்லை" என்று Huang Jingmei கூறினார்.

1 2