• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 09:54:30    
வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டம்

cri

Huang Jingmeiயின் வாழ்க்கை, பயணச் செலவுக்கு வாங்கிய அந்த 20 யுவானால் மாறியது. அப்போது சீன குழந்தை மற்றும் பதின்ம வயதினரின் நிதியம் Rong Shui மாவட்டத்தில் வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டத்தின் நடைமுறையாக்கத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தது. இந்நிதியத்தின் தலைமைச் செயலாளரின் உதவியாளர் Li Jiguang அங்குள்ள முதலாவது மாணவி வகுப்புக்குச் சென்றார். இவ்வகுப்பைச் சேர்ந்த 8 மாணவியர் பேசினர். Huang Jingmei அவர்களில் ஒருவர். இவ்வாண்டு 62 வயதான Li Jiguangகின் நினைவில் அப்போதைய காட்சி இன்னும் இருக்கிறது.
"கண்ணீர் நிறைந்தவாறு குழந்தைகள் பேசினர். தங்களது ஆசிரியர்கள், தங்களது குடும்பம் மற்றும் தங்களைப் பற்றி அவர்கள் கூறினர். தாங்கள் சொந்த இன்னல் மட்டுமின்றி, இதர குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் பற்றியும் அவர்கள் கூறியதால் நாங்கள் மனம் உருகினோம். அறக்கொடைத் துறையில் ஈடுபட்ட மக்களை பொறுத்த வரை அவர்களுக்கு உதவியளிக்கும் பொறுப்பு உண்டு" என்று அவர் கூறினார்.


மாணவிகளின் உருக்கமான பேச்சை கேட்ட பின், Rong Shui தேசிய இன இடைநிலைப் பள்ளியின் மாணவியரை வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டத்தில் சேர்ப்பதென Li Jiguang முடிவு செய்தார். மேலும், அப்போது இன்னல் மிகுந்த நிலையிலான Huang Jingmeiக்கு அவர் சொந்தமாக உதவித் தொகை வழங்கினார்.
2000ஆம் ஆண்டு நல்ல மதிப்பெண்ணுடன் ஆசிரியர் பயிற்சி பள்ளியிலிருந்து படிப்பை முடித்த Huang Jingmei மலைப் பிரதேசத்துக்குத் திரும்பி, துவக்கப் பள்ளி ஆசிரியையாக வேலை செய்யத் தொடங்கினார். குழந்தைகள் பாடல் பாடவும் நடனம் ஆடவும் அவர் கற்றுக் கொடுத்ததோடு, வெளி உலகம் பற்றியும் தனது வளர்ச்சி பற்றியும் அவர்களுக்கு கூறினார். எதிர்காலம் தங்களது கையில் இருக்கிறது. படிப்புக்கான வாய்ப்பை தாமாகவே முயற்சி மேற்கொண்டு பெற வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு தெரிவித்தார்.

தற்போது 28 வயதான Huang Jingmei, Rong Shui தொழில் முறை கல்வி மையத்தில் இசை ஆசிரியையாக மாறியுள்ளார். அவர் பேசுகையில், உள்ளூர் குழந்தைகள் பலர் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின் மேற்படிப்புக்கான வாய்ப்பு பெற முடிவதில்லை. எனவே அவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தற்போது சீனாவில் 18 லட்சத்துக்கு அதிகமானோர் Huang Jingmei போன்று வறிய பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றுள்ளனர். 1989ஆம் ஆண்டு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் 80 கோடி யுவானுக்கு அதிகமான பணம் திரட்டப்பட்டு, 800க்கு மேற்பட்ட பள்ளிகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.


வசந்த காற்று மற்றும் மழையில் மொட்டு மலர்வது போல் கல்வியின் நன்மையான தாக்கத்தினால் வறிய பெண் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். கடவுள் கதவை மூடிய போதிலும் சன்னல் ஒன்றைத் திறந்து வைக்கிறார். சூரிய ஒளியும் திசையும் காணப்படுகிறது. அந்த ஒளி உலகத்தை வெப்பமாக்குகிறது. அது வாழ்க்கையை மீண்டும் உருவாக்கும் ஆற்றலாகும். சொந்தமாக இயற்றிய வறிய பெண் குழந்தைகளுக்கான பாடல் என்ற பாடலில் Huang Jingmei இவ்வாறு எழுதினார்.
முந்தைய வறிய பெண் குழந்தைகள் 20 ஆண்டுகள் கடந்து, எதிர்காலத்தில் மேலும் அழகான மலர்களை போல் இருப்பார்கள் என நம்புகின்றோம்.


1 2