• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:25:53    
உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் காஸ்கட் மாவட்டம்

cri

சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் செ புங் நகருக்கு வடமேற்கில் காஸ்கட் மாவட்டம் அமைந்துள்ளது. 20,673 சதுரகிலோமீட்டர் நிலப்பரப்புடைய இம்மாவட்டத்தில் மொத்தம் 2 இலட்சத்து 47 ஆயிரம் மக்கள் வாழ்கின்றன்ர். மங்கோலிய இனத்தை முக்கியமாகவும் ஹான் இன்த்தைப் பெரும்பான்மையாகவும் கொண்ட இம்மாவட்டத்தில், உய், மஞ்சு, சுவான், கொரிய, தாஹுர் உள்ளிட்ட 10 சிறபான்மை தேசிய இனங்கள் உண்டு. 306வது இலக்க தேசிய நெடுஞ்சாலையும் 303வது இலக்க தேசிய நெடுஞ்சாலையும் இருப்பு பாதையுடன் இணைந்து முழு மாவட்டத்திலும் போக்குவரத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கியுள்ளன.

காஸ்கட் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேய்ச்சல் நிலம், காடு, ஆகியவை காணப்படுகின்றன. மேய்ச்சல் நிலத்தின் நிலப்பரப்பு ஏறக்குறைய 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர். காட்டின் நிலப்பரப்பு 50 இலட்சம் முவாகும். அதிமதுர வேர், EPHEDRA உள்ளிட்ட சீன சுதேச மருந்து மூலிகைகளும் நீர் வளமும் உள்ளன. தாலினோ ஏரியில் பல்வகை மீன்கள் உண்டு. கோதுமை, மக்காச் சோளம், பல்வகைத் தானியங்கள் அவரை வகைகள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. இங்கு வளமிக்க உலோகத்தாதுப் பொருட்களும் புதைந்திருக்கின்றன. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஹு லியன் என்பது யாங்சி ஆற்றுக்கு வடக்கிலுள்ள ஈயம் மற்றும் இரும்புச் சுரங்கமாகும். முழு பிரதேசத்தின் ஈயத்தின் படிவில் சீனாவில் இது மூன்றாமிடம் வகிக்கின்றது. இம்மாவட்டம், சீனாவின் தா சின் ஆன் மலைத் தொடரின் தென்மேற்குப் பக்கத்திலும் என் சான் மலைத்தொடரின் வடமேற்கு ஓரத்திலும் அமைந்துள்ள படியால் இங்குள்ள காற்று வளம் தூய்மை கேடற்ற தொழிற்துறையை வளர்ச்சியுறச் செய்வதற்கான சிறந்த மூலவளமாகின்றது. காஸ்கட் மாவட்ட அரசு முதலீட்டின் மூலம் காற்று ஆற்றல் மின்னாக்கிகளை உட்புகுத்தியுள்ளது என்று இம்மாவட்டத்தின் கட்சிக் கமிட்டி செயலாளர் சின் யி தெரிவித்தார்.

1  2  3