• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:25:53    
உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் காஸ்கட் மாவட்டம்

cri

தாலிமோ காற்று ஆற்றல் மின்னாக்கி அமைப்பில் 26 மின்னாக்கிகள் உள்ளன. இவற்றில் 20 டென்மார்க்கிலிருந்தும் 6 ஸ்பெய்னிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. ஆண்டுக்கு 3 கோடியே 75 இலட்சம் மிலோவாட்ட மின்சாரத்தை அவை உற்பத்தி செய்ய முடியும். காற்று ஆற்றலால் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியின் பிரிக்கப்பட முடியாதொரு பகுதியாக மாறியுள்ளது. குறிப்பாக இப்பிரதேசத்தின் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான முக்கியமானதொரு வழிமுறையுமாகும்.

புல் வெளியானது இங்குள்ள மக்கள் வாழும் இடமாகும். கால்நடை வளர்ப்பு தொழில் முழு மாவட்டத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதனால் கால்நடை வளர்ப்புத் தொழிலின் வளர்ச்சியும் இயற்கை வளத்தின் நியாயமான பயன்பாடும் முழு மாவட்டத்தின் தொடர வல்ல வளர்ச்சியுடன் தொடர்புடையவை.

கட்டுமானத்தை விரைவுப்படுத்தும் அதே வேளையில் பாரம்பரிய உற்பத்தி முறையையும் மாற்றி வருகின்றோம். புல் வெளிப் பிரதேசத்தின் சம நிலைக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றோம். மேய்ச்சல் பகுதிகளை வரையறைத்துள்ளோம். இதன் மூலம் மணல் நிலப்பரப்பைச் சீர்திருத்துகின்றோம். ஒட்டமொத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பச்சை பசேலென்ற நிலத்தைப் பாதுகாக்கின்றோம் என்று செயலாளர் சின் யி கூறினார். புல் வெளியில் அடிக்கடி நிகழும் வறட்சியையும் புயல் காற்றையும் சமாளிக்கும் பொருட்டு, ஒட்டுமொத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மாவட்ட அரசின் திட்டத்தின் படி, பல்வேறு பகுதிகள் தத்தம் மேய்ச்சல் திட்டங்களைத் தீட்டிருக்கின்றன. அவர்கள், அறிவியல் முறையைக் கொண்டு மேய்ச்சல் நிலங்களை நியாயமான முறையில் நிர்வகிக்கின்றனர். இம்மாவட்டத்தில் 4 லட்சம் மு மேய்ச்சல் நிலங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மு புல்வெளிப் பிரதேசம் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, மேய்ச்சல் நிலமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

1  2  3