• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:54:17    
கைப்பந்து வீராங்கனை சௌ லிய் லிய்

cri

சீன அணியில் சௌ லிய் லிய் சேர்ந்த போது, பயிற்சியாளரின் கவனத்தை ஈர்த்தார். பல தனிச்சிறப்பியல்புகள் அவருக்கு உண்டு. வலைக்கு முன்னர் விரைவாக இடம் மாறுவதிலும், பந்தைத் தடுத்து நிறுத்துவதிலும் அடிப்பதிலும் அவர் சிறந்து விளங்குகின்றார் என்றார் அவர்.

சௌ லிய் லிய் அழகான மங்கை ஆவார். பல விசிறிகள் அவரை மிகவும் விரும்புகின்றனர். ஆட்டோகிராப் கேட்டு, சௌ லிய் லியை மொய்ப்போர் பலர். இந்த உலக கோப்பை போட்டியில், நவம்பர் 2ந் நாள் சீன அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போது, ஜப்பானிய பார்வையாளர்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறி, ஆரவாரம் செய்தனர். அதைக் கண்டு அவர் வியப்புற்றார். உண்மையில், அவருடைய பிறந்த நாள் அக்டோபர் 8 ஆகும். ஆயினும், பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சௌ லிய் லிய் உண்மையை வெளிப்படுத்தவில்லை.

மாறாக, இங்கே பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஜப்பானிய நண்பர்களுக்கும் ஜப்பானியக் கைப்பந்து சங்கத்துக்கும் நன்றி என்றார் சௌ லிய் லிய்.

பாப் இசையும் திரைப்படமும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.

2004ஆம் ஆண்டில் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தலைச்சிறந்த சாதனை புரிய வேண்டும் என்பது தமது விருப்பமாகும் என்று அவர் தெரிவித்தார். பந்தைத் தடுத்து நிறுத்தும் தமது ஆற்றலைத் தொடர்ந்து உயர்த்தி, சீன மகளிர் கைப்பந்து அணிக்கு வெற்றி தேடித் தர விரும்புவதாக அவர் கூறினார்.

உலகின் தலை சிறந்த பந்து தடுப்பாளராக மாற விரும்புகின்றேன். சீன அணியின் பெருஞ்சுவராக இருந்திடப் பாடுபடுவேன் என்றார் சௌ லிய் லிய்.


1  2  3