• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:59:33    
மேசைப் பந்தாட்ட வீராங்கணை தெங் யா பிங்

cri

மேசைப்பந்து விளாயாட்டு என்பது, சீனாவின் பாரம்பரிய விளையாட்டு. மேசைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் தெங்யாபிங் என்பவர், புகழ்பெற்ற வீராங்கனையாவார். சீன மக்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக மேசைப்பந்தாட்டப் போட்டி, உலக கோப்பை மேசைப்பந்துப்போட்டி ஆகியவற்றில் சீன அணிக்கு அவர் சாம்பியன் பட்டம் ஈட்டித் தந்தார். மேசைப் பந்தாட்டப் போட்டியில், வீரஞ்செறிந்த, விட்டுக்கொடுக்காத எழுச்சியைக் காட்டியதால், அவர், துணிச்சல் மிக்க வீராங்கனை என, சர்வதேச ஒலிம்பிக்கமிட்டித் தலைவர் சமாராஞ் பாராட்டினார். 2000ஆம் ஆண்டு சீன அணியிலிருந்து விலகிய பின், மேற்படிப்புக்காக அவர் பிரிட்டன் சென்றார். சீன மேசைப் பந்தாட்டக் குழு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2002 டிசெம்பர் திங்களில் பெய்ஜிங்கில் நடைபெற்ற கொண்டாட்ட நடவடிக்கையில் தெங் யா பிங் கலந்துகொண்டார். பிரிட்டனிலிருந்து நாடு திரும்பி, மாணவர் சீருடை அணிந்த அவர், மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்தார் . பெய்ஜிங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சீன மேசைப்பந்தாட்டப் போட்டியில் தலை சிறந்த பரிசு பெற்றதெங் யா பிங்கை, மேசைப் பந்தாட்ட ரசிகர்கள், சூழந்துகொண்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். நாட்டிங்ஹம் பல்கலைக் கழகத்தில் ஓராண்டு படிப்பை முடித்துக்கொண்டு, தற்கால சீனா பற்றிய ஆராய்ச்சியில், பண்பாட்டுவியல் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதாக தெங் யா பிங் தெரிவித்தார்.
1  2  3