• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:59:33    
மேசைப் பந்தாட்ட வீராங்கணை தெங் யா பிங்

cri

முனைவர் பட்டம் பெறும் பொருட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயில அவர் பதிவு செய்திருக்கிறார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி, சீன சமூகத்துக்கு ஏற்படுத்தும் செல்வாக்கு என்பது அவரின் ஆராய்ச்சித் தலைப்பாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அனைத்துலக மக்களுக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தக் கூடியது. இது விளையாட்டுத் துறை மட்டும் என்று கூறியபோதிலும், அதன் செல்வாக்கு பரந்துபட்டது, ஆழமானது. விளையாட்டுப் போட்டியை நடத்தும் தகுதியைப்பெற்ற நாடுகளின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை இது முன்னேற்றுவிக்க முடியும். இது ஆராயத் தக்கது என்று தெங் யா பிங் கூறினார். வெளிநாட்டு வாழ்க்கை, உலகை உண்மையில் அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆதலின், 3 ஆண்டுகளுக்குப் பின், அதாவது, முனைவர் பட்டம் பெற்றதை அடுத்து, நாடு திரும்பி, தாய்நாட்டுக்குச் சேவை புரிய விரும்புவதாக அவர் தெரிவித்தார். தற்போது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு வீரர் குழுவுறுப்பினராகவும் பொறுப்பு ஏற்றுள்ளார். அவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வகை கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. அதே வேளையில், சர்வதேச மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் உலகளாவிய வளர்ச்சி தொடர்பான தெங் யா பிங் திட்டம் என்ற நடவடிக்கையிலும் பங்குகொள்ள வேண்டியுள்ளது. இதனால், கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டது. பணி மேற்கொள்ளும்.

1  2  3