அதே வேளையில், கல்வியறிவு கற்றுக்கொண்டால், இரட்டைப் பயனைப் பெறலாம் என நம்புகின்றேன் என்று தெங் யா பிங் தெரிவித்தார். 90ஆம் ஆண்டுகளில், சீனாவின் பிரபல மேசைப்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனையாக தெங் யா பிங் விளங்கினார். உலக மேசைப்பந்தாட்டப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன் பட்டப்போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளில், 60க்கும் அதிகமான விளையாட்டு நிகழ்ச்சிகளில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். உலகப் பட்டியலில் 1990ஆம் ஆண்டுக்குப் பின் தெங் யா பிங்கின் பெயர், முதலிடம் வகித்துவருகின்றது. மேசைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி வரலாற்றில் பதிவான அனைத்து முக்கிய போட்டிகளிலும், உலகமகளிர் ஒற்றையர் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் அவர் சாம்பியன் பட்டம் பெற்ற முதல்வராவார். மனஅமைதியுடன், பல்கலைக்கழகத்தில் பயின்று, வெகுவிரைவில் முனைவர் பட்டம் பெற்ற, சீன மேசைப்பந்தாட்ட அணியின் முதல் வீராங்கனையாகத் திகழப் பாடுபடப்போவதாக, தெங் யா பிங் தெரிவித்தார். 1 2 3
|