அதன் சாளரம் மூலம், சியாமன் நகரின் அழகான காட்சியைக் கண்டுகளிக்கலாம். பெய்லுசோ உணவு விடுதியின் சேவை நிலையும் உறைவிட வசதியும் பரவாயில்லை. சியாமன் நகரின் வணிக மையப் பகுதியில் அமைந்துள்ள பெய்லுசோ உணவு விடுதி, போக்குவரத்து வசிதி மிக்கது. விருந்தினருக்கு அது திறந்துவிடப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. அறைகளின் பயன்பாட்டு விகிதம் சுமார் 84 விழுக்காடாகும். வணிகர், முக்கியப் பயணிகளாவர். பயணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டினர் மீண்டும் வருகை தந்தவராவர். சியாமன் நகரில் இடை வெப்ப மண்டலக் காலநிலை நிலவுகின்றது. கோடைக்காலத்தில் கடும் வெயில் இல்லை. குளிர்காலத்தில், கடும் குளிர் கிடையாது. ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படுகின்றது. பெரிய கோல்ப் மைதானங்கள் சில அங்கு உள்ளன.
1 2 3 4 5 6 7
|