யூன் நான் மாநிலம், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவு 390 சதுர கிலோமிட்டராகும். இயற்கை வளம் மிக்க மாநிலம் அது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் மேற்குப் பகுதி வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, தன் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அது அதிகரித்துள்ளது. அத்துடன், தொடரவல்ல வளர்ச்சி வழிமுறை மூலம், பசுமைப் பொருளாதாரத்தையும் வளர்ச்சியுறச் செய்துவருகின்றது.
சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலங்களை விட, யூன் நான் மாநிலம், பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. நிரந்தர தொழில் துறைகளிலும், புதிய தொழில் நுட்ப துறைகளிலும், தென் பகுதியிலுள்ள கடற்கரை பகுதியுடன், இது போட்டி போட இயலாது. ஆனால், பசுமைப் பொருளாதார வளர்ச்சியில், கிழக்குப் பகுதி மாநிலங்களை விட, அது மேம்பாடு கொண்டுள்ளது என்று, யூன் நான் மாநில வளர்ச்சி திட்டக் குழுவின் தலைவர் பாங் சி சுன் தெரிவித்தார். 1 2 3 4
|