இயற்கை வளத்தை வளர்ச்சியுறச் செய்வதிலும், பயன்படுத்துவதிலும், யூன் நான் மாநிலம் கவனம் செலுத்திவருகின்றது. சிறப்பு பயன்பாட்டுக் காடுகள், பொருளாதாரக் காடுகள், செழுமையான காடுகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் அது கவனம் செலுத்துகின்றது. அதேவேளையில், மலர், பழம், காய்கறி ஆகியவற்றின் வளர்ச்சியிலும், அது கவனம் செலுத்திவருகின்றது.
நீர் ஆற்றல் வளத்தின் வளர்ச்சியில் ஈடுபடுவது என்பது, யூன் நான் மாநில பசுமைப் பொருளாதாரத்தின் முக்கிய தொரு பகுதியாகும். மிக அதிகமான நீர் ஆற்றல் என்பது, அதன் மேம்பாடாகும். அதன் நீர் மின் ஆற்றல் 9 கோடி கிலோ வாட் அதிகமாகும். சீனாவில், 2 ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், யூன் நான் மாநிலத்தின் செழுமையான சுற்றுலா வளம், மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பனிபடர்ந்த மலைகள், இடுக்கு வழிகள், காடுகள், புல்வெளி ஆகிய அழகிய இயற்கை காட்சித்தலங்கள், அங்கு உள்ளன. தவிர, தைய் இனம்、ஈ இனம்、பெய் இனம்、நாசி இனம் முதலிய சிறுபான்மை இனங்கள், மேலும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள்யூன் நான் மாநிலத்தில் பயணம் மேற்கொள்வதை ஈர்க்கின்றன. கடந்த ஆண்டில், அங்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 13 இலட்சத்துக்கு அதிகமாகும். இதன் மூலம், சுற்றுலாத் துறையின் வருவாய், 1900 கோடி யுவானை எட்டியுள்ளது. 1 2 3 4
|