• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-21 16:02:10    
சீனாவில் காப்பீடு

cri

சீனப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. இப்போது, உணவு மற்றும் உடை பிரச்சினை அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்க்கைப் பாதுகாப்பு, உடல் நலம் ஆகியவற்றில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இப்புதிய நிலைமையில், காப்பீடு பெறுவது, சீன மக்களின் வாழ்க்கையில் இடம் பெறத் துவங்கியுள்ளது. செல்வி ஸாவ் ஜின் மிங், கடந்த ஆண்டு தலைநகர வெளிநாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தற்போது, பெய்ஜிங்கிலுள்ள ஒரு கூட்டு நிறுவனத்தில் பணியாற்றுகின்றார். நல்ல ஊதியம் பெறுவதால், உடல் நலக் காப்பீட்டுப்பத்திரத்தை உடனடியாக வாங்கினார். "என் தோழியின் தந்தை, கடும் நோயினால் பாதிக்கப்பட்டார். அவர், ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தார். இல்லையெனில், பெரிய மருத்துவ மனையில் தங்குவதற்கான செலவையும், சிகிச்சைக் கட்டணத்தையும் அவர் செலுத்தியிருப்பார். இந்த நிகழ்ச்சி, எனக்குப் படிப்பினையாக அமைந்தது.

1  2  3