• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-21 16:02:10    
சீனாவில் காப்பீடு

cri

இதனால், உடல் நலக் காப்பீட்டை எடுக்கத் தீர்மானித்தேன்" என்றார் அவர். ஊதியத்தின் 10 விழுக்காட்டை ஆண்டுதோறும் இதற்குப் பயன்படுத்த விரும்புவதாக, செய்தியாளரிடம் அவர் கூறினார். லி சியாங் என்பவர், சுதந்திரமாகத் தொழில் புரிகிறார். தனக்கும் அண்மையில் வாங்கிய காருக்கும் அவர் பாலிசி எடுத்தார். "விபத்தில், கார் நாசப்படும் போது, காப்புறுதி நிறுவனம், ஒரு பகுதி தொகையை நட்ட ஈடாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி, காரைப் பழுது பார்க்கலாம். இதனால் தனிநபர் நட்டம் பெரிதும் தவிர்க்கப்பட முடியும்" என்றார் அவர். முன்னர், சீனாவில் மக்கள் முதலீடு செய்வதற்காண வழி குறைவு. பெரும்பாலோர் வங்கியில் பணத்தைச் சேமித்தனர். தற்போது, சொத்துக்களின் மதிப்பு, அதன் அதிகரிப்பு ஆகியவற்றில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். காப்பீடு செய்வது என்பது, சீன மக்களின் குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய இடம்பெறுகிறது. சென் ச்சி சுன் என்பவர், தகவல் தொழில் நுட்பத் துறையில் 5 ஆண்டாக ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டில், நண்பரின் பரிந்துரையின் பேரில், போனஸ் எனப்படும் மிகையூதியம் வழங்கும் காப்பீட்டில் அவர் சேர்ந்தார். "என் நண்பர் ஒருவர் இத்தகைய காப்பீடு வாங்கினார். என்னைப் போன்ற இளைஞருக்கு இது பொருத்தமானது என்று, அவர் கருதி, எனக்குப் பரிந்துரைத்தார். இதில், இரண்டு பயன் உண்டு. ஒன்று, காப்புறுதி காலத்தில் விபத்து ஏற்பட்டால், பயன் பெறலாம். இரண்டு, நிலையான வருமானமும் கிடைக்கிறது" என்றார் அவர். சீன மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றமானது, வாழ்க்கை பற்றிய கருத்து மற்றும் வாழ்க்கை முறையில் அவர்கள் மாற்றம் அடைவதை வெளிப்படுத்தியுள்ளது. முன்னர், சீனாவில், அமங்கலமான வார்த்தைகளைக் கேட்க மக்கள் விரும்பவில்லை. அரசு அலுவலகங்களும் தொழில் நிறுவனங்களும் அவற்றின் பணியாளர்களுக்கான முதுமைக் காப்புறுதி, மருத்துவக் காப்புறுதி முதலியவற்றுக்கு இதுவரை பொறுப்பேற்றன. பணியாளர் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், சந்தைப் பொருளாதார அமைப்பு முறையின் காரணமாக, இத்தகைய காப்புறுதி சமூகமயமாக்கப்படுகின்றது. வாழ்க்கையின் பாதுகாப்பு, உடல்நலம் முதலியவை பற்றிய கருத்துக்கள் மாற்றம் அடைந்துள்ளன. சீனாவின் புகழ்பெற்ற காப்புறுதியியல் ஆய்வாளர் ஹாவ் யென் சு கூறியதாவது, "காப்புறுதி பற்றிய சீன மக்களின் கருத்தில் வளர்ச்சிப் போக்கு தென்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், அரசு முதுமைக் காப்புறுதி, குடியிருப்பு, மருத்துவக் காப்புறுதி முதலியவற்றின் அமைப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, முந்திய அரசு மற்றும் தொழில் நிறுவனம் வழங்கும் காப்பீடு சார்ந்த கருத்து சரிப்படுத்தப்படலாயிற்று.

1  2  3