இப்போது, புதிய முதலீட்டுக் காப்பீட்டு முறையை மக்கள் நாடுகின்றனர்" என்றார் அவர். மேலை நாடுகளின் காப்புறுதிச் சந்தையுடன் ஒப்பிடுகையில், சீனக் காப்புறுதிச் சந்தை தொடக்க நிலையில் உள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த 24 ஆண்டுகளில், சீனக் காப்பீட்டுத் துறை வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. காப்பீடு விற்பனை மூலம் பெறும் வருமானம் ஆண்டுக்கு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிவரை, சீனாவில், 60க்கு அதிகமான காப்பீட்டு நிறுவனங்களும் 700க்கு அதிகமான தொழில் முறைக் காப்பீட்டுத் தரகர் அமைப்புகளும் உள்ளன. இத்துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சுமார் 10 விழுக்காட்டுச் சீன மக்கள் காப்பீடு செய்து கொண்டுள்ளனர். தற்போது, சீனக் காப்பீட்டுச் சந்தை, படிப்படியாக வளர்ச்சியுற்று, முழுமையடைந்து வருகிறது. காப்புறுதி வகையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1 2 3
|