
யாங் சன் லுங் அவர்களுக்கு, வயது 51. குள்ளமானவர், மிகவும் நேர்மையானவர். கிராமவாசி போன்ற தோற்றமுடையவர். தென் சீனாவின் கு நான் மாநிலத்தின் சியாங் சி து சியா இன மற்றும் மியௌ இன தன்னாட்சி சோவில் பிறந்தவர். இளமைக் காலத்திலேயே இலக்கியத்தில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். உள்ளூர் பல்கலைக்கழத்தின் சீன மொழியியல் துறையில் சேர்ந்து படித்தார். கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் பலவற்றை எழுதினார். இது அவர்தாம் பிற்கால படைப்பு இலக்கியப் பணிக்கு அடிப்படையாக அமைந்தது. பட்டம் பெற்ற பின், அவர் பெய்ஜிங்கில் உள்ள சீனத் தேசிய இன விவகார கமிஷனில் பணி நியமனம் செய்யப்பட்டார். அப்பொழுது முதல், தேசிய இனப் பணியில் ஈடுபடும் அதே வேளையில், ஓய்வு நேரத்தில் படைப்பு இலக்கியப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
1 2 3
|