
அமெரிக்காவிலுள்ள சில வாசகர்கள் தமது உள்ளக் கிடக்கையை அவரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். யாங் சன் லுங் எழுதிய கட்டுரைகள், சீனாவின் 50 சிறுபான்மைத் தேசிய இனங்களுடன் தொடர்புடையவை. அவருடைய படைப்புகள் இச்சிறுப்பான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் எழில் மிக்க இயற்கை காட்சிகளையும் மனித சமுதாயத்தின் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளையும் எடுத்துக்காட்டியுள்ளன. அன்றி, பல்வேறு தேசிய இன மக்களின் தனிப்பட்ட உள்ளக் கிடக்கையையும் வெவ்வேறான தேசிய இனங்களின் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பையும் எடுத்துக்காட்டியுள்ளன. சீனாவின் 55 சிறுபான்மைத் தேசிய இன மக்களுக்காக, மேலும் கூடுதலான இலக்கிய படைப்புகளை உருவாக்கி, இக்கட்டுரைகளை நூல்களாக வெளியிட வேண்டும் என யாங் சன் லுங் விரும்புகிறார். "யாங் சன் லுங் எழுதிய கட்டுரைகளில் வாழ்க்கை பழக்கவழக்கங்கள், தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு, எதார்த்த உணர்வு ஆகிய மூன்று தனிச்சிறப்பியல்புகள் இடம் பெறுகின்றன" என்கிறார் புகழ் பெற்ற இலக்கியத் திறனாய்வாளர் ஷி யிங். 1 2 3
|