
1980 முதல் இது வரை, சுமார் ஆயிரம் கட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். உரை நடைக் கட்டுரைகள் இவற்றில் முக்கிய இடம் பெறுகின்றன. "மலைக் கிராமத்துச் சிறிய பாலம்", "மேற்கு கு நான் பற்றிய நினைவுகள்", "காற்றாடி மரங்கள்" ஆகிய தேர்ந்தெடுத்த வசன இலக்கியங்கள், பல்வேறு தேசிய இன வாசகர்கள் மற்றும் இலக்கியத் திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. தமது படைப்பு இலக்கியத்திற்கு தமது ஊர் தான் ஊற்றுமூலமாகும் என, அவர் கருதுகிறார். "குழந்தைப் பருவம், இளமைக் கால வாழ்க்கை ஆகியவை ஓர் எழுத்தாளரின் படைப்பு இலக்கியப் பணிக்கு பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றது. நான் சியாங் சியில் பிறந்து, வளர்ந்தேன். 26 வயதில் பெய்ஜிங் வந்தேன். து சியா இனத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் பிரதேச சிறப்பியல்பு ஆகியவை, பசு மரத்தாணிப் போல் என் மனதில் ஆழப்பதிந்துள்ளது" என்றார் யாங் சன் லுங். து சியா இன எழுத்தாளரின் சிறப்பு உணர்வுடன், அவர் வாசகர்களுக்கு அவ்வினத்தின் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துரைக்கிறார். 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட து சியா இனத்தவர் முக்கியமாக சியாங் சி பிரதேசத்தில் குழுமி வாழ்கின்றனர். நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், அவர்கள் மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தனர். அங்கு போக்குவரத்து வசதி கிடையாது. பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மந்தமாக இருந்தது. மக்கள் வறிய வாழ்க்கை நடத்தி வந்தனர். நவ சீனா நிறுவப்பட்ட பின் குறிப்பாக, சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளி நாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில், து சியா இன மக்கள் உண்மையான வசந்தகாலத்தை வரவேற்றுள்ளனர். மலைக்கிராமத்திலிருந்து வெளியே வருவது பற்றிய அவரது கட்டுரைத் தொகுதி, இதை முழுமையாகப் பிரதிபலிக்கின்றது. யாங் சன் லுங் சீனாவின், இதர தேசிய இன மக்களின் வாழ்க்கையை வர்ணிக்கும் கட்டுரைகள் பலவற்றையும் தீட்டியுள்ளார். 80களின் இடைக்காலத்தில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், 3ஆண்டுகள் பணி புரிந்தார். அவர் எழுதிய "மங்கலம், லாஸா" எனும் கட்டுரை, பரவலாக பேசப்பட்டது.
1 2 3
|