2007ஆம் ஆண்டுக்குள் சீனாவின் மேற்குப் பகுதியில், 9 ஆண்டுக் கட்டாயக் கல்வி முறையை அடிப்படையில் பரவலாக்கி, இளைஞர் மற்றும் நடுத்தர வயதுடையோரில் எழுதப் படிக்கத் தெரியாதவர் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று, சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் கூறியிருக்கிறார். இது, சோ மா அம்மையாருக்குப் பெரும் நம்பிக்கை ஊட்டியுள்ளது. அவர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினரும் திபெத் ஷ்யென் துவக்கப்பள்ளியின் துணைத் தலைவியுமாவார். திபெத் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று அவர் நம்புகிறார்.
லான் சோ பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற சோ மா, 20 ஆண்டாகத் துவக்கப்பள்ளியில் கணிதம் கற்பித்து வருகிறார். அரசும் கல்விப் பணியாளர்களும் மேற்கொண்ட அயரா முயற்சியின் விளைவாக, திபெத் கல்வி, குறிப்பாக அடிப்படைக் கல்வி, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடரில் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
"கல்வித் துறையில் திபெத்துக்கு, அரசு உதவி வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில் உணவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றுக்கு அரசு பொறுப்பு ஏற்கின்றது. தன்னாட்சிப் பிரதேசத்துக்கு நிதி குறைவு. ஆகவே, அது நடுவண் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்நோக்குகிறது. தற்போது திபெத் கல்வி மற்றும் கற்பிக்கும் வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளன. ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது" என்றார் அவர்.
1 2 3
|