சோ மாவும் அவர் சகாக்களும் ஆண்டுதோறும் கால் நடை வளர்ப்பு பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளைச் சந்தித்து, உதவி புரிகின்றனர். "அப்பிரதேசத்துக் குழந்தைகள் சிறந்த கல்வி பெறத் துணை புரிவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். பல ஆசிரியர்களும் தன்னாட்சிப் பிரதேசத் தலைவர்களும் நானும் இதற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
அவர் ஆற்றிய பெரும் பங்கைப் பாராட்டும் வகையில், கட்சியும் அரசும் பல பரிசுகளை அவருக்கு வழங்கியுள்ளன்.
"அனைத்துச் சீன மே தின உழைப்பு பாராட்டுப் பதக்கம்" "தலைசிறந்த வீராங்கனை" "தன்னாட்சிப் பிரதேசத்தின் தலையாய ஆசிரியை" ஆகியனவும் இன்ன பிறவும் அவருக்குக் கிடைத்துள்ளது. இவையனைத்தும் அவருக்கு பேரூக்கம் அளித்துள்ளன. இன்று அவருடைய மாணவர்கள் நாடெங்கும் இருக்கின்றனர்.
"எனது மாணவர்களில் சிலர், கல்வித் துறைத் தலைவராகவும் வேறு சிலர் துணை மாவட்டத் தலைவராகவும் பணி புரிகின்றனர். இன்னும் சிலர், எங்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகின்றனர். ஆசிரியர் என்ற முறையில், இது குறித்து நான் பெரிதும் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன்" என்றார் அவர்.
சோ மா போன்ற தலைசிறந்த ஆசிரியர் சீனாவில் இருக்கின்ற காரணத்தால், கடந்த ஆண்டுகளில், சீனாவின் கல்வித் துறை மகிழ்ச்சி தரும் முன்னேற்றம் கண்டுள்ளது எனத் துணிந்து கூறலாம். 1 2 3
|