அவர் பணி புரியும் லாஸா ஷ்யென் துவக்கப்பள்ளியில் 154 ஆசிரியர் உள்ளனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் பட்டயம் பெற்றவர் இதில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். திபெத் மற்றும் ஹன் இன ஆசிரியரும் மாணவரும், ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
"முதலாவது வகுப்பில் திபெத் மொழி, சீன மொழி, ஆங்கில மொழி முதலியவற்றை நடத்துகிறோம்" என்றார் அவர்.
கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கல்வி நிதியம் இப்பள்ளியைப் பார்வையிட்டது. குழந்தைகள் ஆங்கில மொழியில் வெளி நாட்டு நண்பர்களுடன் துணிவுடன் கலந்துரையாடியதைக் கண்டு, அவர்கள் வாயாரப் போற்றினர். "எங்கள் பள்ளி மட்டுமல்ல, லாஸாவின் இதர துவக்கப் பளிளிகளும் கல்வி கற்பிப்பதில் பெரும் முயற்சி மேற்கொண்டு நல்ல பயன் பெற்றுள்ளன" என்று சோ மா கூறினார்.
அரசு ஆதரவு அளிக்கிறது, மேலும் பலர் திபெத்தின் கல்வியில் பேரார்வம் காட்டுகின்றனர். அவர்கள் திபெத்துக்குப் பேருதவி வழங்கியுள்ளனர்.
"எடுத்துக்காட்டாக, பெய்ஜிங் தொங் சியாவ் மின் சியான் துவக்கப் பள்ளியும் எங்கள் பள்ளியும் 'ஹவுக் கரம் நீட்டும்'பள்ளிகளாகும். கடந்த பல ஆண்டுகளில் அது எங்களுக்குப் பேருதவி வழங்கியுள்ளதுடன், எங்கள் பள்ளிக்கு ஆங்கில மொழி ஆசிரியரையும் இலவசமாகப் பயிற்றுவித்துள்ளது" என்றார் அவர்.
1 2 3
|