• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-26 21:17:39    
திபெத் விவசாயி பைமாசாஸ்

cri

பைமாசாஸ் என்பவர், திபெத் இன விவசாயி. தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அவர் வசித்துவருகின்றார். அங்குள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையில், 95 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர், திபெத் இனத்தவர் ஆவர்.

முன்பு, அவர்கள், பெரும்பாலும் பயிர்த்தொழில், மேய்ச்சல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி காரணமாக, திபெத் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. பயிர்த் தொழில், கால்நடை வளர்ப்பு தவிர, வியாபாரத்திலும் ஈடுபடத்துவங்கினர். அவர்களில் பைமாசாஸ் ஒருவராவார். உந்து வண்டியை வாடகைக்கு விடுவதில் அவர் ஈடுபடுகின்றார்.

தலைநகரான லாசாவின் புறநகரிலுள்ள லங்கா கிராமத்தில் அவரது வீடு அமைந்துள்ளது.

அவருடைய வீட்டின் பரந்துபட்ட முற்றத்தில், ஒருபுறம், நான்கு வண்டிகள் நிறுத்தப்படலாம். மறுபுறம், மாட்டுத்தொழுவம். பத்துக்கும் அதிகமான மாடுகள் காணப்படுகின்றன. வரவேற்பு அறையில், மலர் மணம் கமழ்கின்றது. ஸான் பா, கிரீம் முதலிய திபெத் இன மக்களின் பாரம்பரிய உணவுப்பொருள், மேசை மீது நிறைய உண்டு. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, தொகைப்பேசி, குளிர்ப்பதனப்பெட்டி உள்பட, நகர் வாழ் மக்களின் வீட்டில் இருப்பன எல்லாம் அவர் வீட்டிலும் உண்டு. முன்பு, வேளாண்மையில் ஈடுபட்ட அவரது குடும்பம், கடந்த சில ஆண்டுகளாக, வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது, வியாபார வளர்ச்சியுடன், தனது வாழ்க்கையும் மேம்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

1  2  3