• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-26 21:17:39    
திபெத் விவசாயி பைமாசாஸ்

cri

பாலாங் என்பவர் கூறுகினார்: வண்டி வாங்குமாறு அவர் எனக்கு ஊக்கமளித்தார். ஆனால், என்னிடம் அவ்வளவாகப் பணமில்லை. எனவே, பைமாசாஸ் என்னுடன் சேர்ந்து வண்டி வாங்கினார். மூன்றாண்டுகளுக்குப் பின், எனது குடும்பம் வளமடைந்தது. இன்று எனக்கென்று சொந்தமாக வண்டி இருக்கின்றது என்றார் பாலாங்.

கிராமப்புற முதியோருக்கும் அவர் உதவுகிறார். பணம் இல்லாத முதியோருக்குப் பணம் தருகிறார். அவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துப் போகிறார். காய்கறி பயிரிடுமாறு தற்போது விவசாயிகளை அவர் அணிதிரட்டுகின்றார்.

அவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது இரண்டு மகன்களும் நன்றாகப் படிக்கின்றனர். இதனால் கல்வியறிவு இல்லாத அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறார். மூத்த மகன், துயோஜிவந்தய் கல்லூரியில் பயில்கின்றான். இளைய மகன் சிறந்த இடைநிலைப்பள்ளியில் படிக்கிறான்.

இதன் மூலம் பைமாசாஸியின் குடும்ப வாழ்க்கையிலான மாற்றத்தை உணரலாம். திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர் குடும்ப வாழ்க்கையில் தற்போது ஆழமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பயிர்த்தொழில், மேய்ச்சல் ஆகியவற்றின் மூலம் போதிய அளவு வருமானம் கிடைக்காலும், மனநிறைவு அடையாமல், வணிகத்திலும் ஈடுபட விரும்புகின்றனர். நகர் வாழ் மக்களைப் போல், சொந்த வண்டியில் லாசா நகரில் உலா வர விரும்புகின்றனர். அன்றி, வெளியுலகைப் பார்க்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.


1  2  3