
திபெத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன், சுற்றுலாத்துறை வளர்ச்சியடையத் துவங்கியது. உற்றார் உறவினரிடம் கடன் வாங்கி, பயணி வண்டி ஒன்றை வாங்கி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு, அதிக வருமானம் பெற்றுள்ளேன். முன்னர், எங்கள் குடும்பத்தின் 7 பேர், 40 சதுரமீட்டர் பரப்பளவுடைய வீட்டில் வசித்தோம். பணம் அதிகமாக கிடைத்த பின், புதிய வீட்டைக் கட்டினேன், தற்போது, 250 சதுரமீட்டர் நிலப்பரப்புடைய இடத்தில் பத்து அறைகள் உண்டு. உறைவிட வசதியும் வாழ்க்கை நிலைமையும் பெரிதும் மேம்பட்டுள்ளன என்றார் அவர்.
இப்போது அவருக்கு மூன்று உந்துவண்டிகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 4 லட்சம் யுவான். ஒவ்வொரு வண்டிக்கும் ஓட்டுநர் உண்டு. தனியொரு வண்டி மூலம், ஆண்டுதோறும் 40 ஆயிரம் யுவானை அவர் ஈட்டுகிறார். கிராமத்தில் வணிகத்தில் ஈடுபடத் துணிந்த முதலாவது விவசாயி என்ற முறையில், அவரது வெற்றிகரமான அனுபவம், ஏனையோருக்கு ஊக்கமளித்துள்ளது. வணிகம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, அவர் உதவுகிறார்.
1 2 3
|