• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jun 19th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-14 08:22:46    
விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி

cri

ஜூனியர் பள்ளியில் கல்வி பயின்ற லியூ கோஃபாங், நகரில் 4 ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறார். கட்டிடத் தொழிலாளியாக, துறைமுக த்தொழிலாளியாக வேலை பார்த்தார். திங்கள் ஊதியம் 400, 500 யுவானாகும். இப்போது, அவரது ஊரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிங் போ நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் கணினி பழுது பார்ப்பில் ஈடுபடுகிறார். பணி எளிதானது, திங்கள் ஊதியம் சுமார் 1300 யுவானாகும். தனக்கு உள்ளூர் அரசு இலவச பயிற்சி வழங்கியதால், இத்தகைய சிறந்த வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளதாக, லியூ கூறுகிறார்.

கடந்த கோடைகாலத்தில், உள்ளூர் கிராமவாசி தன்னாட்சிக் கமிட்டியின் தலைவர், மாவட்ட அரசு வினியோகித்த 200 யுவான் மதிப்புள்ள பயிற்சிச் சீட்டை, லியூ கோஃபாங்குக்கு வழங்கினார். விவசாயி எதைப் படிக்க விரும்புகிறாரோ, அதை மாவட்டத் தலைநகரிலுள்ள அல்லது நகரிலுள்ள பயிற்சி வகுப்பில் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். லியூ கோஃபாங் கூறியதாவது:

"எனக்கு வீட்டில் வேலை இல்லை. எனவே, கணினி பயன்பாடு பற்றிய கல்வியைப் பயில விரும்பினேன். ஒரு திங்கள் பயின்றேன். தொடக்கத்தில் தட்டச்சுப் பயிற்சி செய்தேன். பின்பு, சில முக்கிய மென் பொருட்களைப் பயன்படுத்தலானேன். வெளியூரில் வேலை செய்த பின், மேலும் திறமையுடன் கணினியைப் பயன்படுத்தியுள்ளேன்" என்றார் அவர்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040