பயிற்சி வகுப்பில் கணினி செயல்பாடு மற்றும் பழுது பார்ப்புத் தொழில் நுட்பத்தில் லியூ கோஃபாங் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பின்னர், தற்போதைய வேலை கிடைத்தது. தமது ஊரிலிருந்து வந்த இளைஞர் பலர், பயிற்சி வகுப்பில் கல்வி பயின்ற பின், மனநிறைவு தரும் பணியைப் பெற்றுள்ளனர். அவர்களின் தொழில் நுணுக்க அறிவை உயர்த்திடத் துணை புரியும் வழிமுறையை வழங்குபவர், சாங் ஷான் மாவட்டத்தின் தலைவர் சோ லியூ ஜூன் ஆவார்.
அவர், மாவட்டத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த 2 ஆண்டுகளில், முழு மாவட்டத்தின் 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான வழியைக் கண்டறிந்தார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உழவுத் தொழில் மட்டும் போதாது என்பதை அவர் கண்டறிந்தார். ஆகவே, விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி சீட்டை வழங்கும் வழிமுறையை அவர் முன்வைத்தார். வளர்ச்சி குன்றிய விவசாயிகள், இதன் மூலம் ஒரு தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் இலவசமாக கலந்து கொள்ளலாம். அவர் கூறியதாவது,
"விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி வாய்ப்பை வழங்குவதில், இரண்டைக் கருத்தில் கொள்கிறேன். ஒன்று, குறைந்த கல்வி நிலை மற்றும் தொழில் நுணுக்க அறிவானது, விவசாயிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு மாபெரும் தடையாகும். மற்றது, அவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிப்பது என்பது, பயிற்சித் திட்டத்தை விவசாயிகள் தாமாகத் தேர்ந்தெடுக்கலாம். பயிற்சி அளிக்கும் பிரிவுகளுக்கு அரசு நிதியுதவி செய்கிறது. இது, உற்பத்தி ஆற்றலைப் பாதுகாத்து, உயர்த்த முடியும் என்றார் அவர்.
1 2 3
|