சாங் ஷான் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் கொள்கை நடைமுறைக்கு வந்த ஓராண்டில், பயன் காணப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில், வெளியூருக்குச் சென்று பணி புரியும் 6400 விவசாயிகளில், 3700க்கு அதிகமானோர் இவ்வழிமுறை மூலம் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில், சிலர் அரசு தொழில் தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களின் திங்கள் வருமானம், பொதுவாக 1300 யுவானைத் தாண்டியுள்ளது. 2003ஆம் ஆண்டு, சாங் ஷான் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானம் 2002ஆம் ஆண்டை விட 12.4 விழுக்காடு அதிகமாகும். 2003ஆம் ஆண்டு சீன விவசாயிகளின் சராசரி வருமானம், 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
41 வயதான ஸாங் ஷியாவ் மிங் ஒரு பயிற்சி வகுப்பின் பொறுப்பாளர். பயிற்சி வகுப்பு நடத்துவதன் மூலம் அவரது வருமானம் அதிகரித்துள்ளது. அன்றி, அரசுக்குப் பணி புரிவதால், பணத்துக்காகக் கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.
"பயிற்சிச்சீட்டு முறையில், நகராட்சி அரசிலிருந்து நாங்கள் பணம் பெறுகின்றோம். 20 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பக்காக, ஒவ்வொரு மாணவரும் 200 யுவான் செலுத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெறா விட்டாலும், தொடர்ந்து பயிலலாம். ஒரு முறை பயிற்சி வகுப்பை நடத்துவதன் மூலம், பல ஆயிரம் யுவானை ஈட்ட முடிகிறது" என்றார் அவர்.
இலவசப் பயிற்சி சீட்டு வழங்குவதன் மூலம், பயிற்சியில் பங்கு கொள்ளும் விவசாயிகள், பயிற்சி வகுப்பு நடத்துவோர் ஆகியோரின் வருமானம் அதிகரித்துள்ளது. முழு மாவட்டத்தின் வளர்ச்சியும் முன்னேற்றுவிக்கப்பட்டுள்ளது. சாங் ஷான் மாவட்டத்தின் இந்த வழிமுறையானது, தற்போது, ஸே சியாங் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக்கப்பட்டு வருகின்றது. கிராமப்புற உழைப்பு ஆற்றலுக்கான அடுத்த 5 ஆண்டுப் பயிற்சித் திட்டத்தை இம்மாநில வேளாண் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. பயிற்சி உள்ளடக்கத்தை விவசாயிகள் தெரிவு செய்து, குறிப்பிட்ட தொழில் திறமைப்பாட்டைப் பெறுவதற்கு இது ஊக்கமளிக்கிறது. அவர்களுக்கான பயிற்சிக் கட்டணத்தை அரசு செலுத்துகின்றது. 1 2 3
|