• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-15 11:53:57    
அல்ஷிமர் நோய்

cri
அமெரிக்காவின் முன்னாள் அரசு தலைவர் ரொனால்ட் ரேகன், 93 ஆவது வயதில், கடந்த சனிக்கிழமையன்று காலமானார்.

அவருடைய மரணத்துக்கு, அல்ஷிமர் நோய்தான் காரணம்.

முதுமையில், மனிதர் மிக அதிகமாகப் பயப்படும் நோய்களில் இதற்கு முதலிடம் உண்டு.

இது, ஒருவரின் நினைவாற்றலை, திறமையை மழுங்கடித்து விடுகிறது. இந்நோயைக் குணப்படுத்த வழியில்லை.

40 இலட்சம் அமெரிக்கர், இந்நோயால் அவதிப்படுகின்றனர். இந்த நூற்றாண்டின் நடுவில், இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்ஷிமர் நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று எவருக்கும் தெரியவில்லை. முதுமை என்பது, அதற்குச் சாதகமாக அமைவது மட்டும் ஒரளவு தெரிகிறது. 65 வயது ஆன பிறகு, 5 ஆஈண்டுகளுக்கு ஒரு முறை, இந்நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. 85 வயதுக்குப் பிறகு, பெரும்பாலும் 50 விழுக்காட்டினர் அதனால் பாதிக்கப்படுகின்றனர்.

1  2  3