
வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், யெபியன் கொரிய இனத் தன்னாட்சி சோ அமைந்துள்ளது. அங்கு, சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் கொரிய இனத்தவர் வாழ்கின்றனர். இது, சீனாவின் கொரிய இன மக்கள் தொகையில் 85 விழுக்காடாகும்.
கொரிய இன மக்கள், ஆடல் பாடலை விரும்புகின்றனர். விழா நாட்களின் போதெல்லாம் அவர்கள் ஒன்று கூடி ஆடிப் பாடி மகிழ்வர். 60 வயதான கொரிய இன முதியவர் Cao Wen Song கூறுகிறார். இப்போது, வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. உணவு, உடை பற்றி கவலைப்படத் தேவையில்லை. பொழுதுபோக்கு நேரத்தில், ஆடிப் பாடுவது தவிர, உடற்பயிற்சியும் செய்வேன். பகல் வேலை முடிந்த பிறகு, இரவில் ஆடச் செல்லுவேன்.
சீனா, வட கொரியா, ரஷியா ஆகிய 3 நாடுகளின் எல்லையை ஓட்டி யெபியன் கொரிய இனத் தன்னாட்சி சோ அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, வெளிநாட்டுத் திறப்புப் பணியிலும், அந்நிய முதலீட்டை உட்புகுத்துவதிலும் அரசு வழங்கும் முன்னுரிமையுடன் கூடிய கொள்கையை அனுபவித்துவருகின்றது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொருளாதாரக் கட்டுமானப் பணியை விரைவுபடுத்தியுள்ளது.
1 2 3
|