Hun Chun நகரமானது, யெபியன் கொரிய இனத் தன்னாட்சி சோவின் மிகப் பெரிய வெளிநாட்டு வர்த்தகத் துறைமுகமாகும். இந்நகரத்தில் கடந்த சில ஆண்டுகளில் அந்நிய வணகர் பலர் தொழில் நிறுவனங்களை நடத்தியுள்ளனர். தற்போது இத்தன்னாட்சி சோவில் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, தென் கொரியாவால் முதலீடு செய்யப்பட்டவை. தவிர, இத்தன்னாட்சி சோ, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான், ரஷியா, அமெரிக்கா, சிலி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் வர்த்தக உறவை நிறுவியுள்ளது.
Hun Chun துறைமுகத்தில், ரஷியாவின் பெரிய லாரிகள் தென்பட்டன. பெட்ரோவிச் எனும் ஓட்டுநர் கூறுகிறார். நான் ரஷியாவின் ஒரு போக்குவரத்து கூட்டு நிறுவனத்தின் ஓட்டுநர். நாள்தோறும் இங்கு வருகின்றேன். நான் ஏற்றுச்செல்லும் பொருட்களில், ரஷியாவின் இரும்புருக்கு, வெட்டு மரம், தென் கொரியாவின் மின்சாரக் கருவிகள், வட கொரியாவின் கடல் வாழ்வன ஆகியவை இடம்பெறுகின்றன.
Hun Chun போன்று 10 துறைமுகங்கள் இங்கு உள்ளன. நாள்தோறும் ரஷியா, தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் ஏராளமான வணிகர் இத்துறைமுகங்களில் வியாபாரம் செய்கின்றனர். இத்துறைமுகங்கள் மூலம், ரஷியா, வட கொரியா ஆகியவற்றுக்கு அதிகமான பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் சில கடல் வழியாக தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அனுப்பப்படுகின்றன.
1 2 3
|