இத்தன்னாட்சி சோ, 1952ல் நிறுவப்பட்டது. சீனாவில் மிகவும் முன்னதாக நிறுவப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனத் தன்னாட்சி சோக்களில் ஒன்றாகும். கடந்த அரை நூற்றாண்டில், இத்தன்னாட்சி சோ, இதர இடங்களுடன் தொடர்பு கொள்ளாத வறிய கிராமம் என்ற நிலையிலிருந்து விடுபட்டுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளதுடன், இத்தன்னாட்சி சோவின் பண்பாட்டு மற்றும் கல்வித் துறையிலும் மாபெரும் சாதனை பெறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், எழுதப் படிக்கத் தெரியாத இளம் மற்றும் நடுத்தர வயதுடையவர், தற்போது கல்வியறிவு பெற்றுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இத்தன்னாட்சி சோவைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் மாணவர்கள், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இதர இடங்களிலுள்ள கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். தவிர, இத்தன்னாட்சி சோவில், யெபியன் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டுள்ளது.
எங்கள் பல்கலைக்கழகம், நூற்றுக்கணக்கான முனைவர் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களையும், 70 ஆயிரத்துக்கும் அதிகமான இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்களையும் பயிற்றுவித்துள்ளது. இவர்களில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் கொரிய இனத்தவராவர். தற்போது, இவர்கள், ஜிலின் மாநிலத்தில் குறிப்பாக, யெபியன் கொரிய இனத் தன்னாட்சி சோவில், சோஷலிச கட்டுமானத்திலும் வளர்ச்சியிலும் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். 1 2 3
|