
தாய்பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா?
கண்டிப்பாக.
குழந்தை பால் குடிப்பது குறையுமானால் பால் சுரப்பதும் குறைய வாய்பு உள்ளது. கவலை கோபம் தன்னம்பிக்கையின்மை மனக் குழப்பம் ஆகியவை ஏற்பட்டாலும் பால் உற்பத்தி குறையும். எனவே நல்ல சூழ் நிலையும் தன்னம்பிக்கையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு மிகவும் முக்கியமான தேவைகளாகும்.
குழந்தைக்கு எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
3. 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் துணை உணவு கொடுக்கலாம் என்று உலக நலவாழ்வு நிறுவனம் ஜெனீவாவில் ஒரு குழு கூடி ஆராய்ந்த பின் இவ்வாறு அறிவித்தது.
இதைப் போல நீண்ட காலமாக கேட்கப்பட்டுவரும் மற்றொரு கேள்வி. ஒரு கைக் குழந்தையின் சத்துணவுத் தேவைகளை தாய்ப்பால் மட்டுமே போக்கிவிட முடியுமா என்பதாகும். 4 மாதம் வரை குழந்தைகளின் தேவைகளை போக்கிவிட முடியும். பின் துணை உணவு கைக் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வகை துணை உணவு கொடுக்க வேண்டும். ஒரு வாரம் கழிந்த பின் இரண்டாவது துணை உணவு கொடுக்கலாம். இப்படி படிப்படியாகத் துணை உணவு தருவதன் மூலம் கைக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரலாம்.
1 2 3
|