• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Jun 22th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-24 17:39:27    
நேயர்களின் கருத்துக்கள் 0615-0620

cri
சீன வானொலிக்கு, புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை அனுப்பிய, வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், பூண்டி கே.குப்புசாமி, விழுப்புரம் எஸ் பாண்டியராஜன் முதலியோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். உங்களுடைய வாழ்த்து அட்டைகள், மிகவும் அழகானவை. நன்றி! கடந்த டிசம்பர் திங்களில், தமிழ்ப்பிரிவுப் பிரதிநிதிக்குழு மேற்கொண்ட தமிழகப் பயணம் தொடர்பான செய்தி வெளியான நாளேடுகள் கிடைக்கப்பெற்றுள்ளோம். மிக்க நன்றி. இந்தப்பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. இது பற்றிய அனுபவத்தை விரைவில் வழங்குவோம். அடுத்து, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்ற 15வது கருத்தரங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிக்கான கருத்துகளைக் கேளுங்கள். இக்கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைத்து நேயர்களுக்கும், நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்கிறார், பெருந்துறை, பல்லவி. கே. பரமசிவன். சீன வானொலி தமிழ்ப்பிரிவு பிரதிநிதிக்குழு, தமிழகப்பயணம் மேற்கொண்ட போது, அன்றைய நிகழ்வுகளையும் மறுநாள் மேற்கொள்ளும் நிகழ்வுகளையும் பற்றி, செய்திகள் மூலம், நேயர்களுக்கு அறிவித்த விதம் அருமை. நேயர்கள், அந்தந்த மாவட்டத்திலேயே, பிரதிநிதிக்குழுவைச் சந்தப்பதற்கு, இது வசதியாக அமைந்தது. சீன வானொலிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார் பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.
1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040