|
|
(GMT+08:00)
2004-06-24 17:39:27
|
|
நேயர்களின் கருத்துக்கள் 0615-0620
cri
தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்ததற்கு எங்களின் மனமார்ந்த நன்றி. ஆரணி விழாவில், குழந்தைகள் சீனாவை பற்றியும் சீன வானொலி பற்றியும் பாடிய பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது. குழந்தைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் முசிறி அய்யம் பாளையம், எஸ்.எஸ்.ஹரிதாஸ். பெரும்பாலான நேயர்களுக்கு, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பிடிக்கிறது என, உங்களின் கடிதங்களில் அறிந்துகொண்டேன். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற, உருளைக்கிழங்கு பச்சைமிளகாய் வறுவல் தயாரித்து பற்றி வழங்கிய விதம் அருமை. தமிழகத்தில் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சமைத்து, ருசித்திடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. உருளைக்கிழங்கு வறுவலில், புதியவகை, புதிய சுவை மிகுந்த உணவை வழங்கிய சீன வானொலிக்கு மனமார்ந்த நன்றி என்றார் 30, பள்ளிப்பட்டி, ஆர்.சுப்ரமணி. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் வழங்கிய ஆட்டுக்கால் சூப் செய்முறை மிகப் பயனுள்ளது, எளிதானது. எங்கள் பழக்க வழக்கப்படி, நாங்கள் பயன்படுத்தும் சூப்பில் சிகப்பு முள்ளங்கி போன்ற காய்கறி சேர்ப்பதில்லை. ஆனால், சீன முறைப்படி, ஆட்டுக்கால் இறைச்சியுடன் சிகப்பு முள்ளங்கி சேர்ந்து செய்த ஆட்டுக்கால் சூப் ருசியாகத்தான் இருந்தது அண்டை வீட்டுக்காரர்களிடம் இந்த முறையைக் கூறியதும், உடனடியாக அவர்களும் செய்து பார்த்து ருசித்தனர். சீன ஆட்டுக்கால் சூப் எனும் பெயரும் இட்டனர் என்றார் நாகர்கோவில் ஒய்ஸ்லின். 1 2 3
|
|
|