 THE DAY AFTER TOMORROW என்றொரு ஆங்கிலத் திரைப்படம்.
சூறாவளியும் வெள்ளபெருக்கும் நகரங்களை அழித்தொழித்து, மக்களின் உயிரை உறையவைப்பதாக இந்தப் படம் காட்டுகின்றது.
"இதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. உலகளாவிய காலநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. என்னேனும் ஒரு நாள் கடுமையான பாதிப்பை அது ஏற்படுத்தியே தீரும்" என்று சீன அறிவியலாளர் DONG WENTIE கூறுகிறார்.
உலகளாவிய வெப்பமானது, பூமியை எப்படி உறையச் செய்யும் என்று, சாதாரன மக்கள் கேள்வி எழுப்பலாம். அல்லது புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கலாம். ஆனால், நிபுணர்கள் அதற்கான விளக்கத்தை தர முடியும்.
இந்த வெப்பு அதிகரிப்பானது, பனிப்பாறைகளை உருகச் செய்யும், கடலின் வெப்பநிலை குறையுமாறு செய்யும்.
1 2 3
|