
உயர்நிலை நெடுஞ்சாலை தவிர, நெடுஞ்சாலை மூலம் பயணிகளும் சரக்குகளும் அனுப்பப்படுவதற்கான 61 சர்வதேச நெறிகள், தற்போது சிங்கியாங்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, எல்லை மூலம் ஒரு லட்சம் பேர், போய் வந்தனர். பத்து லட்சம் டன்னுக்கு அதிகமான சரக்கு ஏற்றுமதியாயிற்று; இறக்குமதியானது; கடந்த ஆண்டின் இறுதி வரை, போக்குவரத்தில் இறங்கிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம், 80 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாகும். தலைநகரான உருமுச்சியை மையமாகக்கொண்டு, கிழக்கே சீனாவின் உள்பிரதேசத்தையும், தெற்கே திபெத்தையும், மேற்கே மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசியாவையும் ஒன்றிணைக்கும் நெடுஞ்சாலை வலைப்பின்னல் அடிப்படையில் உருவெடுத்துள்ளது.
1 2 3
|