
சிங்கியாங்கில், நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான முதலீடு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இவ்வாண்டு, ஆயிரம் கோடி ரென் மின் பி யுவான் முதலீடு செய்யப்படும். இவ்வாண்டின் இறுதிக்குள், முழு பிரதேசத்திலும், 85 ஆயிரம் கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை, போக்குவரத்துக்குப் பயன்படலாம். எனவே, சிங்கியாங்கில் நெடுஞ்சாலை வலைப்பின்னல் உருவாகும் என்று சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்துப் பணியகத்தின் தலைவர் முதிலிபு ஹஸிமு கூறினார்.
நெடுஞ்சாலைப் போக்குவரத்து தவிர, பயணி விமான சேவைத்துறையும் விரைவாக வளர்ந்து வருகின்றது. தற்போது, 60 உள்நாட்டு பறத்தல் நெறியும் 6 சர்வதேச நெறியும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், சீனாவின் பல்வேறு பெரிய நகரங்களுக்கும் சில அண்டை நாடுகளின் நகரங்களுக்கும் இடையே விமான சேவை நடைபெறுகின்றது. பெய்சிங், ஷாங்காய், குவாங் சோ உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கும் உருமுச்சிக்குமிடையில் தற்போது நாள்தோறும் பல பறத்தல் உண்டு. 4 மணிநேரத்தில் விமானம் மூலம் உருமுச்சி சென்றடையலாம்.
1 2 3
|