• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-30 11:17:07    
சீனாவில் நரம்பியல் அறுவை சிகிச்சை

cri

மனித குல வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது, கடல் நீரில் ஒரு துளிக்கு ஒப்பாகும். ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில், "நியூரோ சர்ஜரி" எனப்படும் நரம்பியல் நோய்களுக்கான அறுவை சிகிச்சை அளிப்பதில், சீனா மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலை நாடுகளைக் காட்டிலும் இத்துறையில் சீனா மிகவும் பின்தங்கியிருந்த போதிலும், சீன மருத்துவர்கள் முன்னேறிய நாடுகளின் மருத்துவர்தம் திறமையை வெகு விரைவில் எட்டிப் பிடித்துள்ளனர்.

இன்று, இத்துறையிலான எத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையும் சீனாவில் அளிக்கப்பட முடிகிறது என்பது, அபார வளர்ச்சியாகும்.

1949இல் நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, இத்துறையில் மிகுதியும் அக்கறை செலுத்தப்பட்டது. 1970ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படத் துவங்கிய பிறகு, இத்துறையில் சீனா ஆர்வம் காட்டலாயிற்று. பிற நாடுகளின் மருத்துவத்துறை நுட்பங்கள், சீனாவுக்குள் தாராளமாக நுழைய வழியேற்பட்டது.

மூளையில் வளரும் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, அபாரமான ஒன்று. BRAINSTEM-அதாவது மூளைத் தண்டு-நமது கட்டை விரல் அளவே இருக்கின்றது. மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்பத்துகின்றது. அதில் கை வைக்க, மருத்துவர் பயந்த காலம் ஒன்று உண்டு.

சீனாவில் இத்தகைய அறுவை சிகிச்சையை பச்சைக்கொடி காட்டித் துணிச்சலாகத் துவக்கி வைத்த பெருமை, வாங் ஸோங் செங் என்பாரையே சாரும்.

1  2  3